வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

பலேனோ கார் விற்பனை 5 லட்சத்தைத் தாண்டி சாதனை

DIN | Published: 30th November 2018 12:47 AM

மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ கார் விற்பனை வியாழக்கிழமை 5 லட்சத்தை தாண்டி சாதனை படைத்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் (சந்தைப்படுத்துதல் & விற்பனை) ஆர்.எஸ். கல்சி தெரிவித்ததாவது:
பலேனோ மாடல் கடந்த 
2015 அக்டோபர் மாதம் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அதன் விற்பனை வியாழக்கிழமை 5 லட்சம் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டு வெறும் 38 மாதங்களில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-அக்டோபர் காலத்தில் மட்டும் இதன் விற்பனை 20.4 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
பலேனோ காரின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் எங்களது பொறியாளர்கள் உத்தரவாத்ததை அளித்துள்ளனர். இதன் காரணமாகவே, கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து அதிகம் விற்பனையாகும் கார்களில் பலேனோ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
பலேனோ மாடல் இந்தியாவில் தயாராகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு முதல் முதலாக பலேனோவை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு சந்தையைத் தவிர, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஆசியா போன்ற சர்வதேச சந்தைகளிலும் பலேனோவுக்கு பலத்த வரவேற்பு காணப்படுகிறது என்றார் அவர்.
 

More from the section

பங்குச் சந்தையில் தொடர் சரிவு
தொழில்முனைவுக்கான விதிமுறைகள் தளர்வு புதிய தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும்
ஓலாவில் சச்சின் பன்சால் ரூ.650 கோடி முதலீடு
ரூ.2,500 கோடி மதிப்பிலான பங்குகளை விற்க ரிலையன்ஸ் பவர் நிறுவனம் முடிவு
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 311 புள்ளிகள் சரிவு