சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

மாருதி ஸ்விஃப்ட் விற்பனை 20 லட்சத்தை தாண்டி சாதனை

DIN | Published: 28th November 2018 12:42 AM


மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் விற்பனை 20 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் (விற்பனை & சந்தைப்படுத்துதல்) ஆர்.எஸ். கல்சி தெரிவித்துள்ளதாவது:
ஸ்விஃப்ட் ரக கார் விற்பனை கடந்த 2005-ஆம் ஆண்டு மே 
மாதம் தொடங்கியது. இந்த மாடல் கார்களுக்கு வாடிக்கையாளர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்ததையடுத்து அதன் விற்பனை 2010 செப்டம்பரில் ஐந்து லட்சத்தை தாண்டியது. அதன் பிறகு மிக குறுகிய காலமான 2013-செப்டம்பரில் 10 லட்சத்தை தாண்டி ஆச்சரியப்படுத்தியது. 2016 மார்ச்சில் அதன் விற்பனை 15 லட்சத்தை கடந்தது.
இந்த நிலையில், நடப்பு நவம்பர் மாதத்தில் ஸ்விஃப்ட் கார் விற்பனை 20 லட்சம் என்ற மைல்கல்லைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. வாடிக்கையாளர்களின் காத்திருப்பு காலத்தை குறைக்கும் வகையில் கார் உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

More from the section

ஃபோர்டு இந்தியாவின் புதிய எண்டவர் கார் அறிமுகம்
இந்தியாவில் ஹெலிகாப்டர்களுக்கான தேவை சூடுபிடிக்கும்: ஏர்பஸ்
தன்னிச்சையான கடன் மேலாண்மை அலுவலகத்தை அமைப்பதற்கான நேரமிது : நீதி ஆயோக்
ரூ.2,951 கோடி இடைக்கால ஈவுத்தொகையை வழங்கியது என்டிபிசி
ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை