சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

கிளாக்ஸோஸ்மித்கிளைனுடன் இணைவதற்கு ஹெச்யுஎல் குழு ஒப்புதல்

DIN | Published: 04th December 2018 01:05 AM


வேகமாக விற்பனையாகி வரும் நுகர் பொருள்கள் துறையில் முன்னணியில் உள்ள ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் (ஹெச்யுஎல்) இயக்குநர் குழு, கிளாக்úஸாஸ்மித்கிளைன் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் (ஜிஎஸ்கேசிஹெச் இந்தியா) உடன் இணைவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஹெச்யுஎல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இணைப்பு நடவடிக்கை தொடர்பாக ஜிஎஸ்கேசிஹெச் இந்தியாவுடன் இறுதிகட்ட உடன்படிக்கையை ஹெச்யுஎல் நிறுவனம் எட்டியுள்ளது. அந்த வகையில், இந்த இணைப்பு திட்டத்துக்கு ஹெச்யுஎல் நிறுவனத்தின் இயக்குநர் குழு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பங்குகளையும் கையகப்படுத்தும் வகையிலான இந்த இணைப்பு திட்டத்தின் மொத்த வர்த்தக மதிப்பு ரூ.31,700 கோடியாகும்.
இந்த இணைப்பு திட்டத்தின்படி ஜிஎஸ்கேசிஹெச் இந்தியாவின் ஒவ்வொரு பங்கிற்கும் 4.39 ஹெச்யுஎல் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
பிரபல ஹார்லிக்ஸ் பிராண்ட் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்து பொருள்கள் தயாரிப்பில் ஜிஎஸ்கேசிஹெச் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்துடன் இணைவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து தயாரிப்புகளை புதிய பிரிவுகளில் தயாரித்து அளிக்க முடியும். இணைப்புக்குப் பிறகு உணவு மற்றும் புத்துணர்ச்சி வர்த்தக பிரிவின் விற்றுமுதல் ரூ.10,000 கோடியைத் தாண்டும் என்கிறார் ஹெச்யுஎல் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சஞ்சீவ் மேத்தா.
 

More from the section

ஃபோர்டு இந்தியாவின் புதிய எண்டவர் கார் அறிமுகம்
இந்தியாவில் ஹெலிகாப்டர்களுக்கான தேவை சூடுபிடிக்கும்: ஏர்பஸ்
தன்னிச்சையான கடன் மேலாண்மை அலுவலகத்தை அமைப்பதற்கான நேரமிது : நீதி ஆயோக்
ரூ.2,951 கோடி இடைக்கால ஈவுத்தொகையை வழங்கியது என்டிபிசி
ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை