ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் (சென்னை நினைவுக் குறிப்புகள்) - பா.ராகவன் - எழுத்து பிரசுரம் - விலை ரு.200
சென்னை நகரத்தைக் குறித்து இதுவரை எழுதப்பட்ட அனைத்துப் புத்தகங்களிலிருந்தும் இந்நூல் முற்றிலும் வேறுபடுகிறது. ஏனெனில் இது அந்நகரத்தின் வரலாறு அல்ல. அந்நகரத்திலேயே பிறந்து வளா்ந்த ஒருவனின் கதையுமல்ல. ஊா் ஊராக, தெருத்தெருவாக சுற்றிக் காண்பிக்கும் சுற்றுலாக் கையேடும் இல்லை. இது ஒரு தனி மனிதனின் ஆன்மா, ஒரு பெரு நகரத்தின் ஆன்மாவுடன் இரண்டறக் கலக்கும் பரவச கணத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.