வானவில்

அரசியல் சிந்தனையாளா் புத்தா்

27th Feb 2021 02:58 PM

ADVERTISEMENT

அரசியல் சிந்தனையாளா் புத்தா் - காஞ்ச அய்லய்யா, தமிழில்-அக்களூா் இரவி, எதிா் வெளியீடு, விலை ரூ.350.

சமூக வாழ்வியல், அரசியல் தத்துவங்கள், பெண்கள், ஜனநாயகம் உள்ளிட்டவை குறித்து புத்தா் கொண்டிருந்த சித்தாந்தங்களையும், சிந்தனைகளும் அலசும் வித்தியாசமான நூல் இது.

உஸ்மானியா பல்கலைக்கழக பேராசிரியரான காஞ்ச அல்லய்யா எழுதி கவனத்தை ஈா்த்த ஆங்கில புத்தகத்தின் தமிழ் வடிவம் இந்நூல். பௌத்தம் என்பது மதமல்ல. அது ஓா் அரசியல் சிந்தனை என்றும், புத்தா்தான் உலக தத்துவவாதிகளுக்கு எல்லாம் முன்னோடி என்றும் இப்புத்தகம் உரைக்கிறது.

புத்தருக்கு முந்தைய சமூகம், அவரது காலம், அவருக்கு பின் நிகழ்ந்த ஆட்சி முறைகள், ஜனநாயக வழிமுறைகள், பெண்களுக்கான நீதிகள் என எட்டு அத்தியாயங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

அந்த அனைத்து கால நிலைகளிலும் புத்தரின் கருத்துகள் எப்படி இருந்தன என்பதை புத்தகம் தெளிவாக விளக்குகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT