பிரபலங்கள் - புத்தகங்கள்

'தி லா ஆஃப் ஸ்பிரிட்': உள்ளே நடக்கும் ரசவாதம்! - கோபுலு

DIN

வாரும் நண்பரே வாரும்... அமரும் இந்த மலைக்காட்டில் மனிதர்கள் வந்து ரொம்ப நாளாகிவிட்டது. நீங்கள் வந்ததில் சந்தோஷம். நீங்கள் வரப்போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.

அவர் ஒரு யோகினி. குடிசையில் இருக்கிறார். வயது - நிர்ணயிக்க முடியாத வயது. தேஜஸ்வியான உருவம். சாந்தி மண்டலம். இனிய வீணையின் நாதம் போன்ற குரலில் பேசினார். புன்னகையுடன் பேசினார். அவர் எந்த மதத்தைச் சேர்ந்த யோகினி என்பதை அறியமுடியவில்லை.

“வாருங்கள்.... உங்கள் உதவியுடன் சில சாதகங்கள் செய்யக் காத்துக்கொண்டிருக்கிறேன்.’’

என் ஊரு அருகில் மலைத்தொடர், காடுகள். எனக்கு ஓய்வு கிடைக்கும்போதெலாம் அங்கு சென்று நடந்து வருவேன். மலை ஏறி, காடு நுழைந்து, அருவிகளைத் தாண்டி, இயற்கையின் இனிமையில் மூழ்கி, புது சக்தியுடன் ஊர் திரும்புவேன். அதே போல் இத்தடவையும் மலை, காடு அடைந்து எனது இயற்கைப் பயணத்தைத் தொடர்ந்தேன். ஆனால் இத்தடவை வழக்கத்தை விட அதிகமாக நடந்துவிட்டேன். எங்கும் ஒரு நிசப்தம். பறவையின் குரல்களைத் தவிர. பனிப்படலம் சூழ்கிறது. இனிய குளிர் எங்கும். பிறகு மழை பொழிகிறது. தங்க  இடம் தேடக் கண்கள் சுற்றும் முற்றும் சுழல்கிறது.  ஆ... பனி விலகுகிறது. அதோ ஒரு குடிசை கண்ணுக்குத் தென்படுகிறது. அதை அடைந்தேன். கதவைத் தட்டினேன். அங்குதான் அந்த யோகினி அமர்ந்திருந்தார்.

''நீங்கள் சொல்லுவது புரியவில்லையே என்றேன்.

''புரியவைப்பதற்காகத்தானே உங்களுக்காகக் காத்திருந்தேன்''

'' நீங்கள் யாரென்று அறியலாமா? உங்கள் நாமதேயமென்ன...?''

''எனக்கு பல பெயர்கள் உண்டு’’ என்றார் புன்னகையுடன் யோகினி.

''என்ன பெயரில் அழைப்பீர்கள் உங்களை?''

''நான் என்னை அழைத்ததே இல்லை''

யோகியின் குரலில் ஒரு வீணையின் நாதம். கவர்ச்சி. கட்டிப்போடும் குரல் அது. ஓங்காரமாக, ரீங்காரமாக, தம்புரா ஸ்ருதி போன்ற குரல்.

''வாருங்கள் சாதகரே. உங்களுக்காக மீண்டும் ரசவாதம் புரிந்து காட்டப் போகிறேன்''

''என்ன ரசவாதமா? ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தையைக் காட்டப் போகிறீர்களா?''

யோகினி புன்னகைத்தார். ''ஈயத்தைத் தங்கமாக்குவது சாதாரண விஞ்ஞானியின் வேலை. நான் சொல்லும் ரசவாதம் மனிதனின் உள்ளே உள்ள ஆத்ம சக்தியை வெளிப்படுத்துவது. பயம், கவலை, சங்கடம், துக்கங்களை மாற்றி நிம்மதி, தூய்மை, இனிமை போன்ற மாற்றங்களைப் புரியம் ரசவாதம்.

ஆத்மசக்தியா...? எனக்கா காட்டப் போகிறீர்கள்? அப்படியானால் நீங்கள் எந்த மத மரபுப்படி இந்தச் சாதகத்தை செய்யப்போகிறீர்கள். எந்தக் கடவுளை நீங்கள் வழிபடுகிறீர்கள்?

எம் மதமும் எனக்கு சம்மதமே. சம மதமே. எல்லா மதப் பாதைகளுக்கும் காட்டுவது ஒரே வழி. ஆத்ம சக்தி வழி. வாருங்கள்... காலார நடந்து செல்லலாம். சிந்திக்கலாம்.

யோகினி கூறினார். பல பாடங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தை வெளிப்படுத்துவது. The Law of Balance, The Law of Choices, The Law of Process, The Law of Presence, The Law of Compassion, The Law of Faith, The Law of Expectation, The Law of Integrity, The Law of Action, The Law of Cycles, The Law of Surrender, The Law of Unity எல்லாம் சேர்ந்து THE LAW OF SPIRIT.

யோகினி நடந்துகொண்டே விவரித்தார். ‘’ சாதகரே அதோ அந்த 20 அடிக்கு அப்பால் உள்ள மரத்தடியில் உள்ள குழி உங்களுக்கு இலக்கு. அதில் குறிவைத்துக் கல்லால் அடிக்க முடியுமா? செய்து பாருங்கள்’’

அடித்தேன், குறி தவறியது, மீண்டும் மீண்டும் செய்து பார்த்தேன். முடியவில்லை.

‘’சாதகரே... வாரும் மரத்தடிக்கு.’’ அழைத்துச் சென்றார். 2 அடிதூரம். இப்போது வீசுங்கள் கல்லை. குறியில் கல் சரியாக விழுந்தது.

‘’சரி ... 5 அடி தூரம் பின்னால் சென்று கல்லை வீசுங்கள்’’. வீசினேன் குறி தவறியது.

‘’இப்பொழுது ஒரு அடி முன்னே போய் 4 அடியில் கல்வீசுங்கள்’’. செய்தேன். குறி தவறவில்லை.  ''இப்போது 6 அடிக்குப் பின் போய் கல்லை வீசுங்கள்.'' குறி தவறவில்லை.

‘’பத்து அடிக்கு பின்னால் போய் வீசுங்கள்’’. குறி தவறியது. இப்படியாக முன்னும் பின்னும் என்னை நடக்கவிட்டு 20 அடிக்குக் கொண்டு வந்து குறி தவறாமல் வீசப் பயிற்சி அளித்தார்.

யோகினி கூறினார். ‘’ இதற்குப் பெயர் The Law of Process. முயற்சியின் ஒரு நிலைப்பாட்டின் வெற்றி. இதேபோல் அவர் கூறிய எல்லா நியதிகளையும் பரிசோதனையுடன் என்னை செய்யச் செய்தார். விவரித்தார். என் மனதில் சாந்தி பிறந்தது. '' சாதகரே.... இது தான் நான் கூறிய ரசவாதம். உங்களால் முடியும் நண்பரே... சென்று வாருங்கள், திரும்பும் முன் யோகினியைக் காணவில்லை.

இப்படியாக கருத்தாழத்துடன் ஒரு புத்தகம். பெயர் THE LAW OF SPIRIT.  நமது இந்திய வேதாந்தக் கருத்துடன் ஒத்துச் செல்லும் கருத்துகள். ஆசிரியர் டான் மில்மேன் என்ற அமெரிக்கர். சிந்தனையாளர். வித்தியாசமான முறையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் என்னைக் கவர்ந்த புத்தகங்களுள் ஒன்று. கிடைத்தால் நீங்களும் படித்து அனுபவியுங்கள்

                           (தினமணி கதிரில் 20.05.2001 அன்று வெளியானது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT