ஆட்டோமொபைல்ஸ்

ஜன. 23ல் புதிய இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்கிறது ஹோண்டா!

DIN


புதிய இருசக்கர வாகனத்தை ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா, 2023 ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ள நிலையில், அதன் செய்தி குறிப்பில் விரைவில் 'புதிய ஸ்மார்ட்' வரவுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் சிறந்த ஸ்கூட்டர் தயாரிப்பாளராக உள்ள நிலையில், ஹோண்டாவின் ஆக்டிவா வரிசையில் மிகவும் பிரபலமான ஸ்கூட்டரில் புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டாவின் புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களுக்கு இயங்கும் செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறைந்த வேகத்தில் அதாவது 10-15 கிமீ வரை மின்சாரத்தில் மட்டுமே இயங்கும் வகையில் ஹோண்டா நிறுவனம் கொண்டு வரலாம் என தெரியவந்துள்ளது. இந்த ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைப் பற்றி ஹோண்டா எந்தவித அதிகார அறிவிப்பையும் இன்னும் தெரிவிக்கவில்லை என்றாலும் அது ஒரு கேம் சேஞ்சராக அமையலாம் என்று தெரியவந்துள்ளது.

ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனமானது 2022 டிசம்பர் மாதத்திற்கான மொத்த விற்பனை புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

அதில், கடந்த மாதம் 2,50,171 இரு சக்கர வாகனங்களை விற்று 11 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில் உள்நாட்டு சந்தையில் 2,33,151 யூனிட்கள் விற்பனை செய்தது. மீதமுள்ள 17,020 யூனிட்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு இதே காலத்தில் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனையானது 2,23,621 ஆக இருந்தது. டிசம்பர் மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி முறையே 2,10,612 மற்றும் 13,009 ஆக இருந்தது. அதே வேளையில், டிசம்பர் 2022 விற்பனை செயல்திறனுடன் ஒப்பிடும்போது, 2022 நவம்பரில் 3,73,221 யூனிட்களை விற்ற நிலையில், இது 32.9 சதவீதம் குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT