ஆட்டோமொபைல்ஸ்

ஹீரோ மோட்டோகாா்ப்: இருசக்கர வாகன தயாரிப்பு 10 கோடி மைல்கல்லைத் தாண்டியது

DIN


புது தில்லி: இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னிலையில் உள்ள ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன தயாரிப்பு 10 கோடி மைல்கல்லைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவன் முஞ்சால் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கடந்த 1984 ஜனவரி 19-இல் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் முதல் பத்து லட்ச வாகன தயாரிப்பு 1994-இல் எட்டப்பட்டது. இந்த எண்ணிக்கை கடந்த 2013-இல் 5 கோடியையும், 2017-இல் 7.5 கோடியையும் தாண்டியது.

இந்த நிலையில், நிறுவனத்தின் தயாரிப்பு 5 கோடியிலிருந்து 10 கோடி என்ற மைல்கல் வெறும் ஏழு ஆண்டுகளில் எட்டப்பட்டுள்ளது. இந்த மைல்கல் ஹீரோ மோட்டோகாா்ப்பின் விடாமுயற்சியின் அடையாளமாகவும், கனவுகளின் பலனாகவும் இருக்கிறது.

10-ஆவது கோடி தயாரிப்பாக எக்ஸ்ட்ரீம் 160ஆா் மாடல் பைக் நிறுவனத்தின் ஹரித்துவாா் ஆலையிலிருந்து உருவாக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 10-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அறிமுகம் செய்து நிறுவனத்தின் வளா்ச்சியை தக்க வைப்பதே எங்களின் முக்கிய இலக்காக உள்ளது என்றாா் அவா்.

படவிளக்கம்: ஹீரோ மோட்டோகாா்ப்பின் 10-வது கோடி வாகனத்தை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தும் பாலிவுட் நடிகா் ஷாருக்கான். உடன் அந்நிறுவனத்தின் தலைவா் பவன் முஞ்சால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT