ஆட்டோமொபைல்ஸ்

நவம்பரிலும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை சரிவு!

3rd Dec 2019 11:02 AM | அர்ஷத் கான்

ADVERTISEMENTஇந்தியாவில் இருசக்கர வாகனங்கள் விற்பனையின் எண்ணிக்கையானது ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகிறது. அதன்படி கடந்த பல மாதங்களாகவே மோட்டார் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நவம்பர் மாதம் வெளிவந்துள்ள இருசக்கர வாகனங்களின் விற்பனையானது அக்டோபர் மாதத்தைவிட அதிகளவு சரிவை சந்தித்துள்ளது. 

பி.எஸ்-6 ரக  சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பிஎஸ்-6 ரக ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள்  சந்தையில் கொண்டு வரப்படுவதற்கு முன்னர், இந்தியாவில் தற்போதைய பொருளாதார மந்தநிலை மற்றும் பழைய சரக்குகளை  குறிப்பாக கிராமப்புறங்களில் அழிக்க முயற்சிப்பதன் விளைவாக,  நவம்பர் மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனையில் கணிசமான சரிவைக் கண்டுள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் மொத்த விற்பனையில் ஆண்டுக்கு 15.31 சதவீதம் சரிவை சந்தித்துள்ள நிலையில்,  நவம்பர் மாதத்தில் 5,16,775 ஆகவும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 266,582 வாகனங்களை விற்றதாகவும், கடந்த ஆண்டு இதே காலத்தில் 319,965 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 

உள்நாட்டு சந்தையில், ஹீரோவின் விற்பனை நவம்பரில் 15.82 சதவீதம் குறைந்து வெறும் 5,05,994 வாகனங்கள் விற்பனையாகின. அதே நேரத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 26.52 சதவீதம் சரிந்து வெறும் 1,91,222 வாகனங்கள் விற்பனை செய்துள்ளது.   

ADVERTISEMENT

பண்டிகை மாதமான அக்டோபர் மாதத்தில் விற்பனையில் முன்னேற்றம் அடைந்த பிறகு, அடுத்த மாதம் சரிவு காணப்படுவது இயல்பானது. விநியோகஸ்தர்கள் தங்கள் பழைய பிஎஸ்- 6 ரக வாகனங்களை விற்பனை விரும்புவதால், பழைய மாடல்களை அழிக்கும் வரை அவர்கள் புதிய பிஎஸ் -6 ரக வாகனங்களை விற்பனைக்கு கொண்டுவர விரும்பவில்லை என்று ஆட்டோமொபைல் துறை ஆய்வாளர் சுதீப் அரோரா கூறினார்.

ஹீரோ மோட்டோகார்ப்  தனது பிஎஸ்-6 ரக வாகனங்களின் உற்பத்தியை அளவீடு செய்துள்ளதாகவும், அதே நேரத்தில்  சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள பிஎஸ்-6 ரக வாகனங்களை முழுமையாக விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சியாக பிஎஸ்-6 ரக வாகனங்களின் 50- க்கும் மேற்பட்ட வகைகளின் உற்பத்தியை நிறுத்தியதாகவும்,  ஏற்கெனவே எரிபொருள் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹீரோ பிஎஸ்- 6 ரக வாகனமான ஸ்ப்ளெண்டர் சுமார்ட் வாகனங்களின் சில்லறை விற்பனையைத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார் வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர் 2018 நவம்பரில் 4,18,362 வாகனங்களை விற்பனை செய்துள்ள நிலையில், 2019 நவம்பரில் மொத்தம் 3,96,366 வாகனங்களை விற்பனை செய்துள்ளன. அதே நேரத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை சுமார் 5 சதவீதம் சரிந்து வெறும் 3,73,250 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 

இதேபோல், புனேவை தளமாகக் கொண்ட பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உள்நாட்டு விற்பனையில் 11.5 சதவீதம் சரிந்து 2,07,775 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதே நேரத்தில்  கடந்த ஆண்டு இதே காலத்தில் 2,34,818 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. எவ்வாறாயினும், ஏற்றுமதியில் 17 சதவிகிதம் உயர்ந்திருந்தாலும், மொத்த விற்பனையில் 0.9 சதவிகிதம் சரிந்து 403,223 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

முக்கிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த மாதத்தில் 60,411 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பரில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ள ஒரே இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா மட்டுமே.  2019 நவம்பரில் 69,755 வாகனங்கள் விற்பனையை  ஜப்பானிய வீரர் பதிவு செய்துள்ளார். இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்கப்பட்ட 56,531 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 23.39 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வாகனங்களின் எண்ணிக்கையும் அடக்கம். 

இதுகுறித்து சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் கொய்சிரோ ஹிராவ் கூறுகையில்,  பண்டிகைக்குப் பிந்தைய பருவத்தின் வளர்ச்சியின் வேகத்தை சுசுகி பராமரித்து வருகிறது. நிறுவனத்தின் உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் பிராண்டில் நுகர்வோர் நம்பிக்கை காரணமாக இது சாத்தியமானது. இது ஒவ்வொரு ஆண்டும் சுசுகி மோட்டார் ரக வாகன விற்பனையை அதிகரிப்பதற்கும் வழிவகுத்துள்ளது என்றார். 

மேலும், சுசுகி வாகனங்களுக்கான நுகர்வோர் தேவையை கருத்தில் கொண்டு, இந்த மாதம் பெங்களூரு, ஐஸ்வால் மற்றும் சூரத் ஆகிய நாடுகளில்  சிறந்த மதிப்பிலான ஷோரூம்களை அறிமுகப்படுத்தியதன்  மூலம்  சொந்தமான இரு சக்கர வாகன வணிகத்திலும் இறங்கிங்கியுள்ளோம் என்று கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT