சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

ஜோதிட கேள்வி - பதில்கள்

எனது மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்குமா?
 - வாசகர், ஈரோடு

என் மகனுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணமும் கைகூடவில்லை. வேலையும் கிடைக்கவில்லை. உடல் நலம் எப்போது சீராகும்?
 - வாசகர், விழுப்புரம்

எனது பேத்தியின் படிப்பு, திருமணம், எதிர்காலம் எவ்வாறு அமையும்? திருமணம் செய்யும் முன் ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
 - வாசகர், திருவான்மியூர்

என் பேரனுக்கு எப்போது வேலை கிடைக்கும்? எந்த துறையில் வேலை அமையும்? அரசு உத்தியோகம் உண்டா? சொந்த வீடு எப்போது அமையும்?
 - வாசகர், மயிலாடுதுறை

எனது மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். எத்திசையில் வரன் அமையும்?
 - வாசகர், திருப்பூர்

தனியார் வங்கியில் பணிபுரியும் என் மூத்த மகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. மறுமணம் எப்போது நடைபெறும்? மழலை பாக்கியம் உண்டா? வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமையுமா? ஆயுள் பாவம் எவ்வாறு உள்ளது?
 - வாசகர்

என் மகனுக்கு 37 வயதாகிறது. ஐந்து வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பெண்ணிற்கு திருமணத்திற்கு முன்பே ஒருவருடன் நட்பு இருந்திருந்ததால் அந்த நபர் தாலி கட்டியவுடன் மண்டபத்திலேயே கலாட்டா செய்து பெண்ணை அழைத்துச் சென்று விட்டார். விவாகரத்து கேஸ் முடிய மூன்று வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. தற்சமயம் தீவிரமாக மறுமணத்திற்குப் பெண் தேடிக் கொண்டிருக்கிறோம். உள்ளூரில் மருந்து சம்பந்தப்பட்ட தொழில் செய்கிறான்.பெங்களூர் போன்ற பெரிய நகரத்திற்குச் சென்று இதேத் தொழிலைச் செய்யலாமா? தொழிலில் வளர்ச்சி உண்டாகுமா?

என் பேரனுக்கு வயது 29. இன்னும் திருமணம் கைகூட வில்லை. நிலையான வேலையும் கிடைக்கவில்லை. திருமணம், வேலை எப்போது அமையும்?
 - வாசகர், ஆம்பூர்

என் மகன் வெளிநாட்டில் வேலை செய்த போது எங்களை நன்றாக கவனித்துக்கொண்டார். ஆனால் தற்போது செய்து வந்த வேலை விட்டுவிட்டு, இங்குவந்து வேலை செய்கிறார். என் மகனது இந்த மாற்றம் எப்போது சீராகும்? எங்கள் விருப்பப்படி நாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா?
 - வாசகர், திருப்பூர்

சித்த மருத்துவம் படித்துள்ள என் மகளுக்கு அரசு வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்?
 - வாசகி, காஞ்சிபுரம்