சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

ஜோதிட கேள்வி - பதில்கள்

என் சகோதரி மகனுக்கு 40 வயதாகிறது. இன்னும் திருமணம் தடைப்பட்டு வருகிறது. எப்போது திருமணம் நடைபெறும்?
 - வாசகர், சென்னை

எனது மகளுக்கு நிறைய வரன்கள் வந்தாலும் எதுவும் கூடி வரவில்லை. நிறைய பரிகாரங்களும் செய்துள்ளோம். எப்போது பொருத்தமான வரன் கிடைக்கும்?
 - வாசகர், தூத்துக்குடி

என் வயது 18. நான் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறேன். அரசு வேலை கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். அரசு வேலை கிடைக்குமா? எந்த வயதில் வேலை கிடைக்கும்? எப்போது வீடு கட்டுவேன்?
 - வாசகி, நாகப்பட்டினம்

எங்களது மகன் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார். நிறைய பெண் பார்த்தும் இன்னும் திருமணம் அமையவில்லை. நிறைய பரிகாரங்களும் செய்துள்ளோம். எப்போது திருமணம் கைகூடும்?
 - வாசகி, திருஇந்தளூர்

என் மகளுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நிறைய பரிகாரங்களும் செய்துள்ளோம். இன்னும் ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா? எப்போது குழந்தைபாக்கியம் கிடைக்கும்?
 - வாசகர், கும்பகோணம்

என் மகன் அரசு மருத்துவர். தற்சமயம் மேற்படிப்பு படித்து வருகிறார். பூர்வபுண்ணியம் எவ்வாறு உள்ளது? செவ்வாய், சனி, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் பலம் எவ்வாறு உள்ளது? மக்களுக்கு சேவை செய்து மருத்துவத் துறையில் சாதனை செய்வாரா? திருமணம் எப்போது நடைபெறும்? மருத்துவம் படித்த பெண் அமைவாரா? காலசர்ப்ப யோகம் இருக்கிறதா? வெளிநாடு செல்வாரா? எதிர்காலம் எப்படி இருக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?
 - வாசகர், வந்தவாசி

நான் சொந்தத் தொழில் செய்யலாம் என்றிருக்கிறேன். செய்யலாமா? முன்னேற்றம் உண்டாகுமா? திருமணம் எப்போது கைகூடும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?
 - வாசகர், சத்தியமங்கலம்

எனக்கு சுக்கிர தசை நடக்கிறது. இதுவரை வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறேன். சொந்த வீடு அமையுமா? 3 மனைகள் வாங்கியும் இதுவரை பலனில்லை. மனை தொடர்பாக உள்ள பிரச்னை எப்போது முடியும்?
 - வாசகர், திருவல்லிக்கேணி

என் மகனுக்கு வெள்ளி நகைத் தொழிலில் 12 ஆண்டுகள் அனுபவம் உண்டு. தற்போது தனியாகக் கடை வைத்து தொழில் செய்ய விரும்புகிறார். வங்கியில் கடன் வாங்கி கொடுக்கலாமா? தொழிலில் முன்னேற்றம் வருமா? கடன் விரைவில் அடையுமா? எதிர்காலம் எப்படி இருக்கும்? ஆயுள் பலம் எப்படி உள்ளது?
- மாணிக்கம், அம்மாபேட்டை

என் மகன் அனிமேஷன் படிப்பு படித்து வருகிறான். வேலை வாய்ப்புக்கு அதிகம் சந்தர்ப்பம் இல்லை என்றே தோன்றுகிறது. வெளிநாடு சென்று மேலும் படிக்க ஜாதக ரீதியில் கிரகங்கள் உதவி செய்யுமா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
 - வாசகர், பெங்களூரு