சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

ஜோதிட கேள்வி - பதில்கள்

நான் எந்த வேலையை துவக்கினாலும் தடங்கல் ஏற்படுகிறது. நீண்ட சிரமங்களுக்குப்பிறகுதான் ஒரு வேலையை முடிக்க வேண்டியுள்ளது. வாழ்க்கையில் எந்த முன்னேற்றமுமில்லை. குலதெய்வ வழிபாடு செய்தால் நல்லது என்கிறார்கள். குலதெய்வம் எது என குடும்பத்தில் மூத்தவர்களுக்கும் தெரியவில்லை. எங்கள் குலதெய்வம் எது?
 - வாசகர், நெசப்பாக்கம்

பொறியியல் பட்டதாரியான என் மகனுக்கு 30 வயதாகிறது. இன்னும் திருமணம் அமையவில்லை. வேலை வாய்ப்பு, திருமணம் எப்போது அமையும்? எதிர்காலம் எப்படி இருக்கும்?
 - வாசகர், மதுரை

என் மகளின் பிறந்தநாள் குறிப்பு ஜாதகம்/ கணிப்பொறி ஜாதகம் இதில் எது சரியானது? கணிப்பொறியில் திருமணப் பொருத்தம் பார்த்ததில் பாவசாம்யம் திருப்தியாக இல்லை என்று வருகிறது. ஜோதிடர் பார்த்ததில் சரி என்று சொல்கிறார். திருமணம் எப்போது கைகூடும்?
 - வாசகர், சென்னை

எனக்கு 85 வயதாகிறது. என் மகனுடன் அமெரிக்காவில் வசிக்கிறேன். என் மருமகளுக்கு முன்பு புற்றுநோய் கண்டதால், கருமுட்டையை பத்திரப்படுத்தி விட்டு வைத்தியம் செய்து தற்சமயம் நன்றாக இருக்கிறார். தற்சமயம் செயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சி செய்கிறார்கள். ஆண் வாரிசு உள்ளதா? தாய் இல்லாத என் மகனை நன்றாக வளர்த்து அமெரிக்காவுக்கு படிக்க அனுப்பி தற்சமயம் அமெரிக்க குடியுரிமை பெற்று பெரிய பதவியில் உள்ளார். நூறு பேருக்கு மேல் அவருக்கு கீழ் வேலை செய்கிறார்கள். பத்தில் செவ்வாய் ஆட்சி என்பது சிறப்பானது என்கிறார்க

என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? சொந்தமாக தொழில் செய்ய முயற்சி எடுத்துள்ளார். முன்னேற்றம் ஏற்படுமா? பரிகாரம் செய்ய வேண்டுமா?
 - வாசகர், உள்ளகரம்

என் நண்பருக்கு 52 வயதாகிறது. இதுவரை திருமணம் நடைபெறவில்லை. இவர் குடும்பத்தினர் திருமண முயற்சிகள் ஏதும் எடுக்காமலேயே இருந்துவிட்டனர். இனி முயற்சி செய்தால் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதா?
 - வாசகர், நீடாமங்கலம்

என்னுடைய மகளுக்கு அரசு வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? எத்திசையில் வரன் அமையும்?
 - வாசகர், பாளையங்கோட்டை

என் மகளுக்கு கண்ணில் தூரப்பார்வை குறைபாடு உள்ளது? மாப்பிள்ளை வீட்டிற்கு இதை தெரியப்படுத்தியே மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்விக்கப்பட்டது. இப்போது நாங்கள் அவர்களை ஏமாற்றி விட்டதாகச் சொல்லி, தீவிரமாக மருத்துவம் பார்த்து நல்லநிலையில் கொண்டு வந்து விடும்படியாகச் சொல்லி என் மகளை அனுப்பி வைத்து விட்டனர். பார்வை குறைபாட்டிற்கு கண்ணாடி அணிந்திருக்கிறார். இருப்பினும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். கணவருடன் இணைந்து வாழ்வாரா?
 - வாசகர், தஞ்சாவூர்

நான் தற்போது குளிர்பானம் தொழில் செய்கிறேன். வேறு என்ன தொழில் செய்தால் முன்னேறலாம்? சொந்த வீடு எப்போது அமையும்? தற்போது கார் ஓட்டி வரும் என் மகன் என்ன தொழில் செய்தால் முன்னேற்றம் பெறுவார்? திருமணம் எப்போது நடைபெறும்? என் மகளுக்கு வங்கியில் வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்?
 - வாசகர், கள்ளக்குறிச்சி

என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? திருமணம் அமைய பரிகாரங்களும் செய்துள்ளோம். எத்தகைய பெண் எத்திசையிலிருந்து அமைவார்?
 - வாசகி, கோயம்புத்தூர்