ஜோதிட கேள்வி பதில்கள்

15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்துவந்த பணத்தில், ஓராண்டாக யோசித்து முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்குமா? வேறு என்ன தொழில்  செய்யலாம்?

29th Apr 2022 03:59 PM

ADVERTISEMENT

எனது கணவர் ஈரோட்டில் எலக்ட்ரிக்கல் பைக் டீலர்ஷிப்புக்காக ரூ.21 லட்சம் கட்டினார். அலுவலகமும் திறந்துவிட்டோம். இன்று வரை வாகனங்கள் வரவில்லை. 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்துவந்த பணத்தில், ஓராண்டாக யோசித்து முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்குமா? வேறு என்ன தொழில்  செய்யலாம்?

-வாசகி, ஈரோடு.

உங்கள் கணவருக்கு கும்ப லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னாதிபதி அயன ஸ்தானதிபதி சனி பகவான் லக்னத்தில் மூலதிரிகோணம் வர்கோத்தமம், பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச மஹா யோகத்தையும் பெற்று அமர்ந்திருக்கிறார். 
தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டுக்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டுக்குமதிபதியுமான குரு பகவான், களத்திர நட்பு ஸ்தானதிபதியுமான சூரிய (சிவராஜ யோகம்) பகவானுடன் ராகு பகவானும் இணைந்திருக்கிறார். 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீது அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும் , ஒன்பதாம் பார்வை அயன, சயன ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தைரிய, தொழில் ஸ்தானதிபதியான செவ்வாய் பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து, தனது ஆட்சி வீடான தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் கேது பகவானையும் பார்வை செய்கிறார்.
குரு,  செவ்வாய் பகவான்கள் தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு. தற்சமயம் புத பகவானின் தசையில் கேது பகவானின் புத்தி நடக்கத் தொடங்கியுள்ளது. அதனால் தொழிலுக்கு முன் பணமாகக் கொடுத்த பணம், கொஞ்சம், கொஞ்சமாகத் திரும்ப வரும்.  ஆட்டோ மொபைல் தொடர்புடைய வேறு தொழில் (அதிக முதலீடு செய்யாமல்) செய்யலாம். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT