ஜோதிட கேள்வி பதில்கள்

எனது பேத்தி பிளஸ் 2 படித்துவருகிறார். அவரது ஆயுள் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது.  எதிர்காலம் எப்படி இருக்கும்?

29th Apr 2022 03:57 PM

ADVERTISEMENT

எனது பேத்தி பிளஸ் 2 படித்துவருகிறார். அவரது ஆயுள் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது.  எதிர்காலம் எப்படி இருக்கும்?

-சுந்தரராஜன், திருச்சி.


உங்கள் பேத்திக்கு கடக லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம், லக்னாதிபதி சந்திர பகவான். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில், தைரிய, அயன ஸ்தானதிபதியுமான புத பகவானுடன் வர்கோத்தமம் பெற்றுள்ள ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார். 
பூர்வ புண்ணியாதிபதி தொழில் ஸ்தானதிபதி செவ்வாய் பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. குணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டுக்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டுக்குமதிபதியுமான குரு பகவான் தைரிய முயற்சி ஸ்தானத்தில் வர்கோத்தமம் பெற்றுள்ள கேது பகவானுடன் இணைந்து,  நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார்,
குரு பகவானின் ஐந்தாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும் அங்கு உச்சம் பெற்றிருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானின் மீதும், ஏழாம் பார்வை தன் ஆட்சி வீடான மீன ராசியான பாக்கிய ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திர (கஜ கேசரி யோகம்) பகவானின் மீதும், நீச்ச பசங்க ராஜ யோகம் பெற்றிருக்கும் புத பகவானின் மீதும் ராகு பகவானின் மீதும் படிகிறது. 
ஒன்பதாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டுக்கு அதிபதியுமான சூரிய பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில், சுகாதிபதி லாபாதிபதியுமான சுக்கிர பகவானுடன் இணைந்து அவர்கள் இருவரின் பார்வையும் குடும்ப ஸ்தானத்தின் மீது படிகிறது.
தனாதிபதி தன் வீட்டை பார்வை செய்வது சிறப்பு. தற்சயம் சுக்கிர பகவானின் தசையில் சுய புக்தி முடியும் தருவாயில் உள்ளது. சுக்கிர மஹா தசை சிறப்பாகவேச் செல்லும். மேலாண்மைத் துறையில் மேற்படிப்பு படித்தால் நிச்சயம் சிறப்பாக அமையும். 
களத்திர அஷ்டம ஆயுள் லக்கினாதிபதியான சனி பகவான் அயன சயன ஸ்தானத்தில் குரு பகவானின் சாரத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் ஆரோக்யம் ஆயுள் தீர்க்கமாகவும் அமையும்.
பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT