ஜோதிட கேள்வி பதில்கள்

தூக்கத்திலேயே உயிர் பிரிய நினைப்பது நிறைவேறுமா?

29th Apr 2022 03:54 PM

ADVERTISEMENT

எனக்கு வயது 69. திருமணமாகாத நான் அரசுப் பணியாற்றி ஓய்வு பெற்று, தனிமையில் வசித்துவருகிறேன். தூக்கத்திலேயே உயிர் பிரிய நினைப்பது நிறைவேறுமா? எனது மூத்த 2 சகோதரர்கள்,  2 சகோதரிகள் இறந்துவிட்டனர்.  ஆரோக்கியமாக இருக்கும் நான் பலருக்கு உதவி செய்துவருகிறேன்.

- பெ.பாபு, சென்னை.

உங்களுக்கு மீன லக்னம், துலாம் ராசி, விசாக நட்சத்திரம், லக்னாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி குரு பகவான் ஸ்தானத்தில் லக்னத்தில் ஆட்சி பெற்று,  பஞ்ச மஹா புருஷ யோகமான ஹம்ஸ யோகத்தைப் பெறுகிறார்.  
அவருடன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டுக்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டுக்குமதிபதியுமான செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானும், சூரிய (சிவராஜ யோகம்) பகவானும், நீச்சபங்க ராஜ யோகம் பெற்றுள்ள புத பகவானும் இணைந்திருக்கிறார்கள். 
பூர்வ புண்ணியாதிபதி சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து, தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிர பகவானையும் பார்வை செய்கிறார். 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை பூர்வ புண்ணிய  புத்திர ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் லாப, அயன ஸ்தானதிபதியான சனி பகவானையும்  ஒன்பதாம் பார்வையான பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டையும் பார்வை செய்கிறார்.
தற்சமயம் சூரிய பகவானின் தசையில் இறுதிப் பகுதி நடைபெறுகிறது. 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பின்னர், தங்களது ஆன்மிகப் பயணத்தில் வளர்ச்சி உண்டாகும். இறுதிக் காலம் அமைதியாகக் கழியும்.  தினமும் "நமச்சிவாய' என்ற ஐந்தெழுத்தை முடிந்த வரை ஜபித்து வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT