ஜோதிட கேள்வி பதில்கள்

மண்ணிவாக்கத்தில் நாங்கள் கட்டிவரும் வீடு நிறைவடையும் தருவாயில் உள்ளது.  அங்கு எப்போது குடி பெயரலாம்?

29th Apr 2022 04:00 PM

ADVERTISEMENT

மண்ணிவாக்கத்தில் நாங்கள் கட்டிவரும் வீடு நிறைவடையும் தருவாயில் உள்ளது.  அங்கு எப்போது குடி பெயரலாம்?

-வாசகி, திருவொற்றியூர்.

உங்கள் கணவருக்கு விருச்சிக லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம், லக்னாதிபதி, ருணம், ரோகம், சத்ரு லக்னாதிபதி செவ்வாய் பகவான், அயன சயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான விருச்சிக ராசியை அடைகிறார்.
தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டுக்கும், பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டுக்குமதிபதியுமான குரு பகவான் பூர்வ புண்ணிய புத்தி ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று இருப்பது சிறப்பு. 
பாக்கியாதிபதி சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பதும் சிறப்பு. குரு பகவானின் ஐந்தாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சந்திர (குருச் சந்திர யோகம்) பகவானின் மீதும், களத்திர நட்பு ஸ்தானமான சுக்கிர பகவானின் மீது படிகிறது.
தொழில் ஸ்தானாதிபதி சூரிய பகவான், லாபதிபதி புத பகவான் (புத ஆதித்ய யோகம்)  ஆகியோர் தன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறப்பு. 
தற்சமயம் பாக்கியாதிபதியான சந்திர பகவான் தசையில் பிற்பகுதி நடப்பதால், தாங்கள் கட்டிய வீட்டுக்கு மாற்றம் செய்வது நன்மையே செய்யும்.  பிரதி திங்கள்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT