ஜோதிட கேள்வி பதில்கள்

சகோதரிக்கு திருமணம் தள்ளிப் போகிறது. அவருக்குத் திருமணம் எப்போது நடைபெறும்?

29th Apr 2022 04:02 PM

ADVERTISEMENT

எனது சகோதரி 5 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாகப் பணிபுரிகிறார். பல இடங்களில் இருந்து நல்ல வரன் வந்தாலும், மனச் சஞ்சலங்களால் திருமணம் தள்ளிப் போகிறது. அவருக்குத் திருமணம் எப்போது நடைபெறும்?

-வாசகி, சென்னை.

உங்கள் சகோதரிக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னாதிபதி ஆறாமதிபதி சுக்கிர பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் திக் பலம் பெற்றுள்ள சுகாதிபதியான சூரிய பகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு.
தனாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி புத பகவான் லாப ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜ யோகம் பெற்று அமர்ந்திருக்கிறார்.
தர்ம கர்மாதிபதி சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று, உச்சம் பெற்றுள்ள களத்திர நட்பு ஸ்தானதிபதி , அயன ஸதானதிபதியான செவ்வாய் பகவானுடன் இணைந்திருக்கிறார். 
தைரிய ஸ்தானதிபதி சந்திர பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது பகவானுடன் இணைந்து இருக்கிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டுக்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டுக்குமதிபதியுமான குரு பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் வர்கோத்தமத்தில் அமர்ந்து, ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டையம் அங்கு அமர்ந்திருக்கும் ராகு பகவானையும் பார்வை செய்கிறார்.
மாங்கல்ய ஸ்தானதிபதி மாங்கல்ய ஸ்தானத்தைப் பார்வை என்பது விசேஷம்.
குரு பகவானின் ஏழாம் பார்வை  தொழில் ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்து சூரிய (சிவராஜ யோகம்) பகவானையும் சுக்கிர பகவானையும் பார்வை செய்கிறார். குரு பகவானின் ஒன்பதாம் பார்வை அயன, சயன ஸ்தானமான பன்னிரெண்டாம் வீட்டின் மீதும் படிகிறது. 
தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில்  ஆட்சி பெற்றுள்ள பாக்கியாதிபதியான சனி பகவானின் தசையில் பூர்வ புண்ணியாதிபதியான புத பகவானின் புக்தி நடைபெறுகிறது. இது சிறப்பான காலக்கட்டமாகும். அதோடு சனி மஹா தசை யோக தசையாகும். அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த சிறப்பான உத்தியோகத்தில் உள்ள வரன் சம அந்தஸ்தில் அமைந்து திருமணம் கை கூடும்.  பரிகாரம் எதுவும் தேவையில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT