ஜோதிட கேள்வி பதில்கள்

என் மைத்துனர் மகன் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறார். அவர் சொந்தத் தொழில் தொடங்கலாமா அல்லது வேலைக்குச் செல்வது நல்லதா?

DIN

என் மைத்துனர் மகன் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறார். அவர் சொந்தத் தொழில் தொடங்கலாமா அல்லது வேலைக்குச் செல்வது நல்லதா? திருமணம் எப்பொழுது நடக்கும்? எந்தத் திசையிலிருந்து பெண் அமையும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? 

-பாஸ்கரன், கரூர்.

உங்கள் மைத்துனர் மகனுக்கு ரிஷப லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னம், ஆறாமதிபதி சுக்கிர பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்றிருக்கும் தர்மகர்மாதிபதியான சனி பகவானைப் பார்வை செய்கிறார். 
சனி பகவான் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பாகும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் பெற்று சந்திர பகவானுக்குக் கேந்திரம் பெற்றுள்ளதால் பஞ்ச மஹா புருஷ யோகங்களிலொன்றான பத்ர யோகத்தைப் பெறுகிறார். அதோடு ஐந்தாம் வீட்டில் குரு பகவான் சந்திர கேந்திரத்தில் இருப்பதால் குரு சந்திரயோகம், செவ்வாய் பகவான் சந்திர கேந்திரத்தில் இருப்பதால் சந்திர மங்கள யோகம், சூரிய பகவான் இணைந்திருப்பதால் புத ஆதித்ய யோகம், சிவராஜ யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாவதால், பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாக உள்ளது. அவருக்கு படிப்புக்கேற்ற வேலைக்குச் செல்வதே நன்மை பயக்கும்.  அந்த வழியில் முயற்சி செய்யச் சொல்லவும். இன்னும் இரண்டாண்டுகளில் படித்த நல்ல வேலையிலுள்ள வது (பெண்) தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கை கூடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT