ஜோதிட கேள்வி பதில்கள்

என் மூத்த மகன் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து சென்று விட்டார். மறுபடியும் எங்கள் குடும்பத்துடன் அவர் இணைவாரா? 

DIN

என் மூத்த மகன் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து சென்று விட்டார். மறுபடியும் எங்கள் குடும்பத்துடன் அவர் இணைவாரா? 

-வாசகர், கள்ளக்குறிச்சி

உங்கள் மூத்த மகனுக்கு கன்னி லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னம், தொழில் ஸ்தானாதிபதி புத பகவான் இரண்டாம் வீட்டில் சூரிய, சந்திர, சுக்கிர பகவான்
களுடன் இணைந்திருக்கிறார். இதனால் புத ஆதித்ய யோகம், மாளவிகா யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. 
அயன ஸ்தானாதிபதி சூரிய பகவானும் குடும்ப ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜ யோகம் பெற்றிருக்கிறார். பூர்வ புண்ணியாதிபதி சனி பகவான் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்றமர்ந்து, குரு, ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார். தைரிய அஷ்டமாதிபதியான  செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றமர்ந்திருக்கிறார். 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் படிகிறது. 
தற்சமயம், சனி பகவானின் தசையில் இறுதிப் பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு உங்கள் மகனின் மனநிலையில் மாற்றம் உண்டாகத் தொடங்கும். படிப்படியாக இரண்டு குடும்பங்களும் இணைந்து விடும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT