ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. குழந்தை பாக்கியம் எப்பொழுது உண்டாகும்? 

DIN

என் மகளுக்கு திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. குழந்தை பாக்கியம் எப்பொழுது உண்டாகும்? 

-வாசகர், சிவகங்கை மாவட்டம்.

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். லக்னம், சுகாதிபதி குருபகவான் அயன ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் அங்கு உச்சம் பெற்றமர்ந்திருக்கும் சுக்கிர பகவானையும், ஏழாம் பார்வையாக ஆறாம் வீட்டையும், அங்கு அமர்ந்திருக்கும் புத பகவானையும், ஒன்பதாம் பார்வையாக எட்டாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் சந்திர (குரு சந்திர யோகம்) பகவானையும், செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானையும் பார்வை செய்கிறார். 
பாக்கியாதிபதியான சூரிய பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று கேது பகவானுடன் இணைந்திருக்கிறார்.  தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் தைரிய ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்றமர்ந்திருக்கிறார். புத்திர ஸ்தானமும், புத்திர ஸ்தானாதிபதியும், புத்திர காரகரும் (குரு பகவான்) வலுத்திருப்பதால் புத்திர பாக்கியம் உண்டு.
தற்சமயம் புத பகவானின் தசை முடியும் தறுவாயில் உள்ளதால் 2022-ஆம் ஆண்டு இறுதிக்குள் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT