ஜோதிட கேள்வி பதில்கள்

என் வாழ்க்கையில் எந்த முயற்சி எடுத்தாலும் தடைகளும், கஷ்டங்களும் உண்டாகின்றன. எங்கள் பூர்வீக நிலத்திலும் பிரச்னை உள்ளது. இதெல்லாம் எப்பொழுது தீரும்? எனக்கு அரசு வேலை கிடைக்குமா? 

DIN

என் வாழ்க்கையில் எந்த முயற்சி எடுத்தாலும் தடைகளும், கஷ்டங்களும் உண்டாகின்றன. எங்கள் பூர்வீக நிலத்திலும் பிரச்னை உள்ளது. இதெல்லாம் எப்பொழுது தீரும்? எனக்கு அரசு வேலை கிடைக்குமா? 

- வாசகர், வேலூர் மாவட்டம்.

உங்களுக்கு ரிஷப லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னம், ஆறாம் வீட்டிற்குமதிபதியான சுக்கிர பகவான் நீச்சம் பெற்றிருந்தாலும் நவாம்சத்தில் உச்சம் பெறுவதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். ஒன்பது, பத்தாம் வீடுகளுக்கு அதிபதியான சனி பகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும், பூர்வ புண்ணியாதிபதி புத பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. 
குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலமர்ந்து ஐந்தாம் பார்வையாக தன் மூலத் திரிகோண வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் சந்திர (குரு சந்திர யோகம்) பகவானையும், ராகு பகவானையும், ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக அயன ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். 
தற்சமயம் தைரிய ஸ்தானாதிபதியான சந்திர பகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. சந்திர மஹா தசை நடக்கும் காலத்தில், ஏழரை நாட்டுச் சனி காலமும் நடந்தால் வாழ்க்கையில் சில தடைகளும், பிரச்னைகளும் உண்டாகும். அதனால் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் ஏற்ற இறக்கமாகவே தொடரும். மற்றபடி பூர்வீக நிலத்திலுள்ள பிரச்னைகளும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். அரசு வேலையும் கிடைத்து விடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானையும், சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

SCROLL FOR NEXT