ஜோதிட கேள்வி பதில்கள்

என் பேத்திக்கு நல்ல வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடக்கும்? எதிர்காலம் எப்படி இருக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?

DIN

என் பேத்திக்கு நல்ல வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடக்கும்? எதிர்காலம் எப்படி இருக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?

-வாசகர், சிங்கப்பெருமாள் கோவில்.

உங்கள் பேத்திக்கு கடக லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார். 
ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார்.செவ்வாய், குரு பகவான்களின் சம சப்தம பார்வை தர்மகர்மாதிபதி யோகத்தைக் கொடுக்கிறது. கல்வி ஸ்தானாதிபதி சுக்கிர பகவான் கல்வி ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்று தனம், வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதிக்கு நீச்ச பங்க ராஜ யோகத்தைக் கொடுக்கிறார். 
களத்திர நட்பு, அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவானும், தொழில் ஸ்தானத்தில் நீச்சம் பெற்று (நீச்சனை நீச்சன் பார்த்தால் நினைத்ததை முடிப்பான்) நீச்ச பங்க ராஜயோகம் பெறுகிறார். 
தற்சமயம் ராகு பகவானின் தசையில், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் புத பகவானின் புக்தி நடப்பதால் தனியார் துறையில் நல்ல வேலைக்குச் செல்வார். 2024-ஆம் ஆண்டு தொடங்கியவுடன் திருமணம் கைகூடும். நன்கு படித்த, தனியார் வேலையிலுள்ள நல்ல வரன் அமைவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT