ஜோதிட கேள்வி பதில்கள்

என் சகோதரிக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா? திருமணம் எப்பொழுது நடக்கும்? அரசு வேலை கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்..? 

DIN

என் சகோதரிக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா? திருமணம் எப்பொழுது நடக்கும்? அரசு வேலை கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்..? 

பாண்டிச்செல்வி, அருப்புக்கோட்டை. 

உங்கள் சகோதரிக்கு கடக லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம். லக்னாதிபதி சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் களத்திர நட்பு ஸ்தானாதிபதியுடன் இணைந்து இருப்பது சிறப்பு. இவர்களுடன் கேது பகவான் இணைந்திருப்பது சிறு குறை. 
ஐந்து மற்றும் பத்தாமதிபதி செவ்வாய் பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது செவ்வாய் தோஷம் அல்ல.ஆறு, ஒன்பதாம் வீடுகளுக்கு அதிபதியான குரு பகவான் தன் மூலத் திரிகோண வீடான ஆறாம் வீட்டில் சூரிய (சிவராஜயோகம்) பகவான், புத பகவான்களுடன் இணைந்திருப்பதும் சிறப்பு. 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை இரண்டாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானின் மீதும் படிகிறது. இதனாலும் செவ்வாய் தோஷம் இல்லை என்று கூறமுடிகிறது. 
தற்சமயம் களத்திர காரகரான சுக்கிரன் பகவானின் தசையில் சுயபுக்தி முடியும் தறுவாயில் உள்ளதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் வங்கி, காப்பீடு சம்பந்தப்பட்ட துறைகளில் அரசு வேலை கிடைக்கும். எதிர்காலம்,மண வாழ்க்கை சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

SCROLL FOR NEXT