ஜோதிட கேள்வி பதில்கள்

என் பேரன் பொறியியல்  துறையில் படிக்க விரும்புகிறார். அவருக்கு அந்தத் துறை ஏற்றதா?

12th Sep 2021 05:55 PM

ADVERTISEMENT

என் பேரன் பொறியியல்  துறையில் படிக்க விரும்புகிறார். அவருக்கு அந்தத் துறை ஏற்றதா? வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு உள்ளதா? நல்ல வேலை கிடைக்குமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? 

-வடிவேலு, புதுக்கோட்டை.

உங்கள் பேரனுக்கு விருச்சிக லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி, ஆறாமதிபதி செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுய சாரத்தில் தைரிய, சுகாதிபதியான சனி பகவானுடன் இணைந்திருக்கிறார். 

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) அமர்ந்து, ஐந்தாம் பார்வையாக தன் மூலத்திரிகோண வீடான இரண்டாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக சுக ஸ்தானம், கல்வி ஸ்தானமான நான்காம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக ஆறாம் வீட்டையும், அங்கு உச்சம் பெற்றிருக்கும் தொழில் ஸ்தானாதிபதியான சூரிய (சிவராஜயோகம்) பகவானையும், அஷ்டலட்சுமி யோகம் தரும் ராகு பகவானையும் பார்வை செய்கிறார். 

ADVERTISEMENT

அஷ்டம, லாபாதிபதியான புத பகவான் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்றிருப்பதும் சிறப்பாகும். 

தற்சமயம் செவ்வாய் பகவானின் தசை நடப்பதால், அவருக்கு பொறியியல் படிப்பே ஏற்றது. உடனடியாக தனியார் துறையில் தகுதியான வேலை கிடைத்துவிடும். இரண்டாண்டுகள் கழித்து வெளிநாடு சென்று படிக்கும் யோகமுண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT