ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

28th May 2021 05:25 PM

ADVERTISEMENT

சிறப்பான யோகங்கள் உள்ளன

 

எனது மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
 -வாசகர், தூத்துக்குடி மாவட்டம்.
 உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி, அயன ஸ்தானாதிபதி சனி பகவான் அயன ஸ்தானத்தில் ஆட்சிபெற்று சந்திர பகவானின் கேந்திரத்தில் இருப்பதால் சச மஹா யோகத்தைக் கொடுக்கிறார்.
 சுக ஸ்தானத்திற்கும், பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிர பகவான், அஷ்டம ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று களத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சந்திர, செவ்வாய், குரு பகவான்களுடன் இணைந்து இருக்கிறார்.
 குரு பகவான் சந்திர (குரு சந்திர யோகம்) பகவானுடனும், செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானுடனும், புத பகவானுடனும் இணைந்திருப்பது சிறப்பு.
 குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும், ஏழாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தற்சமயம் சனி மஹா தசையில் சுய புக்தி நடப்பதால் இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு படித்த, நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT