மண வாழ்க்கை சிறப்பாக அமையும்
என் மகளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்... அரசு வேலை கிடைக்குமா... திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும்...?
ஜெயந்தி, ஓசூர்.
உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், விருச்சிக ராசி. லக்னாதிபதி ஆறாமதிபதி சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பெறுகிறார்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று சூரிய, புத, ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார். தர்ம கர்மாதிபதியான சனி பகவான் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார்.
அஷ்டம, லாபாதியான குரு பகவான் லக்னத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மீன ராசியை அடைகிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றமர்ந்திருக்கும் சந்திர (கஜ கேசரி யோகம்) பகவானின் மீதும் படிகிறது.
தற்சமயம் கேது மகா தசையில் பிற்பகுதி நடப்பதால் இந்த ஆண்டே அவருக்கு வேலைக்கான ஆணை கிடைத்துவிடும். அடுத்த ஆண்டு திருமணம் கைகூடும். மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.