ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? படித்த பெண் அமையுமா...? தற்சமயம் குறைந்த வருமானத்தில் வேலை பார்த்து வருகிறேன்... எதிர்காலம் பற்றி கூறவும்?

14th May 2021 06:45 PM

ADVERTISEMENT

படித்த பெண் அமையும்!
 எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? படித்த பெண் அமையுமா...? தற்சமயம் குறைந்த வருமானத்தில் வேலை பார்த்து வருகிறேன்... எதிர்காலம் பற்றி கூறவும்?
 அசோக்குமார், விழுப்புரம்.
 உங்களுக்கு சிம்ம லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் புத (புத ஆதித்ய யோகம்), சனி பகவான்களுடன் இணைந்திருக்கிறார். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து, ஐந்தாம் பார்வையாக தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானமான தன் மூலத் திரிகோண வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜயோகம்) பகவானையும், புத, சனி பகவான்களையும், ஒன்பதாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திலேயே ஆட்சிபெற்று அமர்ந்திருக்கிறார்.
 ராகு பகவான் ஆறாம் வீட்டில் அஷ்டலட்சுமி யோகத்தைப் பெற்றமர்ந்து சுக்கிர பகவானுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் ராகு பகவானின் தசையில் ராகு புக்தி (சுய புக்தி) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் நடக்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். படிப்படியாக உத்தியோகத்தில் நல்ல வருமானம் வரத் தொடங்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT