ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா... திருமணம் எப்பொழுது நடக்கும்... அஷ்டம சனியில் திருமணம் செய்யலாமா...  -வாசகர், வல்லம்.

DIN

அஷ்டம சனியில் திருமணம் செய்யலாம்
 என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா... திருமணம் எப்பொழுது நடக்கும்... அஷ்டம சனியில் திருமணம் செய்யலாமா...
 -வாசகர், வல்லம்.
 உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னம், கல்வி, அன்னை, சுக ஸ்தானாதிபதி புத பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில், பூர்வ புண்ணியாதிபதி சுக்கிர பகவானுடன் (மஹா விஷ்ணு மஹாலட்சுமி யோகம்), சூரிய, செவ்வாய் பகவான்களுடன் இணைந்திருக்கிறார்.
 இது ஒரு வலுவான அமைப்பாகும். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக ஒன்பதாம் வீட்டையும், அங்கு மூலத்திரிகோணம் பெற்றமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியான சனி பகவானையும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டை, ஏழாம் பார்வையாகவும், ஒன்பதாம் பார்வையாக லக்னத்தையும் அங்கமர்ந்திருக்கும் சந்திர (குரு சந்திர யோகம்) பகவானையும் பார்வை செய்கிறார்.
 தற்சமயம் குரு பகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டுக்குள் சமதோஷமுள்ள படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். தனியார் துறையிலேயே உயர்வடைவார். அஷ்டம சனியில் திருமணம் செய்யலாம். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT