ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனின் மனைவி திடீரென்று இறந்துவிட்டார். அவர்களுக்கு குழந்தை இல்லை. மகனின் மறுமணத்திற்கு முயற்சி செய்கிறோம். எப்பொழுது நடக்கும்... அவருக்கு வேலையும் சரியாக அமையவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  -வாசகர், சென்னை.

DIN

மறுமணம் நடக்கும்
 என் மகனின் மனைவி திடீரென்று இறந்துவிட்டார். அவர்களுக்கு குழந்தை இல்லை. மகனின் மறுமணத்திற்கு முயற்சி செய்கிறோம். எப்பொழுது நடக்கும்... அவருக்கு வேலையும் சரியாக அமையவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
 -வாசகர், சென்னை.
 உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்று புத (புத ஆதித்ய யோகம்) பகவான், கேது பகவானுடன் இணைந்திருக்கிறார்.
 இவர்களின் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீது படிகிறது. பூர்வ புண்ணியாதிபதியான குரு பகவான் லக்னத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானமான தன் மூலத் திரிகோண வீடான தனுசு ராசியையும், அங்கமர்ந்திருக்கும் சுக பாக்கியாதிபதியான செவ்வாய் பகவானையும், ஏழாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானையும் பார்வை செய்கிறார்.
 மூன்று, பத்தாம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிர பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றமர்ந்திருக்கிறார். ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் எட்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று சந்திர பகவானுடன் இணைந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார்.
 சுக்கிர பகவான் நவாம்சத்தில் உச்சம் பெறுவதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார் தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து மறுமணம் நடக்கும். அடுத்து வருவது சூரிய மஹா தசையாக உள்ளதால் நிரந்தர வேலையும் கிடைத்து விடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT