ஜோதிட கேள்வி பதில்கள்

என் பக்கத்து வீட்டுக்காரர் தன் வீட்டை கட்டும் பொழுது என் நிலத்தையும் ஆக்கிரமித்து வீடு கட்டிவிட்டார்.

தினமணி

என் பக்கத்து வீட்டுக்காரர் தன் வீட்டை கட்டும் பொழுது என் நிலத்தையும் ஆக்கிரமித்து வீடு கட்டிவிட்டார். கோர்ட் கேஸில் என் பக்கம் தீர்ப்பு வந்தது. ஆனால் அந்த வீட்டை இடிக்க கோர்ட்  ஆர்டர் போடும் போதெல்லாம், எதிர்தரப்பினர் வராததால் கோர்ட் ஆட்கள் திரும்பிச் சென்று விடுவார்கள். இந்தப் பிரச்னை எப்பொழுது தீரும்...  கால சர்ப்ப தோஷத்தால் கஷ்டப்படுகிறேனா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  

-வாசகர், மதுரை.

உங்களுக்கு விருச்சிக லக்னம், சிம்ம ராசி, உத்திரம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம். லக்னாதிபதி ஆறாம் வீடான ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் லக்னத்தில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) ஆட்சி பெற்று வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். 
லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைக் கொடுக்கிறார். 
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மீன ராசியை அடைகிறார். 
பாக்கியாதிபதியான ஒன்பதாம் வீட்டிற்கதிபதியான சந்திர பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். 
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுய சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் லக்னத்தில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். 
அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் லக்னத்தில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் லக்னத்தில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். 
கேது பகவான் லக்னத்தில் புத பகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். ராகு பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 
லக்னத்தில் சூரிய பகவானும், லக்னாதிபதி செவ்வாய் பகவானும் (ஒன்று, பத்தாம் வீடுகளுக்கதிபதிகள்) இணைந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் முதல் தர ராஜ கிரகங்கள் ஆவார்கள். 
நட்பு ஸ்தானாதிபதியான சுக்கிர பகவான் சூரிய பகவானுடன் ஒரே பாகையில் இருக்கிறார்கள். இருவரும் லக்ன சுபரான குரு பகவானின் சாரத்தில் இருக்கிறார்கள். லக்னத்தில் புத பகவானும் இணைந்து இருப்பதால் புத ஆதித்ய யோகம் உண்டாகிறது. சூரிய பகவானுடன் கேது பகவான் இணைந்திருப்பது குறை என்றாலும், அவர்களுக்கிடையே 17 பாகைகள் இடைவெளி உள்ளது. அதனால் சர்ப்ப கிரகத்தால் சூரிய 
பகவான் பாதிக்கப்படவில்லை. 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் ( நான்காம் ராசி வீடு, வாகனம், தாய், குடும்ப சுகம்) வீட்டின் மீதும், ஏழாம் பார்வை ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை ஆயுள், புதையல் ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் படிகிறது. ஆறாம் வீட்டை சனி பகவான் பத்தாம் பார்வையாக பார்வை செய்வதும் சிறப்பு.
நிலம், வீடுகளுக்கு செவ்வாய் பகவான் காரகமாகிறார். வழக்கு விவகாரங்களுக்கு செவ்வாய், குரு பகவான்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இவர்களின் சுப பலத்தினால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். அதோடு சுக ஸ்தானத்தை நான்காம் பார்வையாக செவ்வாய் பகவானும், சந்திர பகவானும் பார்வை செய்கிறார்கள். 
ராகு, கேது பகவான்களுக்குள் அனைத்து கிரகங்களும் (லக்னம் உள்பட) அடங்கியிருப்பது சயன கால சர்ப்ப யோகமாகும். இது பெருமளவுக்கு நன்மைகளைத் தரும் அமைப்பாகும். வாழ்க்கையில் பெரிதாக வெற்றி அடைந்தவர்கள் இத்தகைய யோகத்தைப் பெற்றிருப்பார்கள். 
லக்னத்தில் கேது, ஏழில் ராகு பகவான்கள் இருப்பதற்கு சர்ப்ப சாந்தி செய்து கொள்வது அவசியம். மற்றபடி உங்கள் ஜாதகம் வலுவாகவே உள்ளது. தற்சமயம் சனி பகவானின் தசையில் குரு பகவானின் புக்தி நடப்பதால், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நீதிமன்றம் மூலமாகத் தக்க முடிவு உங்களுக்கு சாதகமாகக் கிடைத்துவிடும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT