ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்... அவருக்கு புனர்பூ தோஷம் உள்ளதா... பரிகாரம் கூறவும்...

11th Jun 2021 04:33 PM

ADVERTISEMENT

என் மகளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்... அவருக்கு புனர்பூ தோஷம் உள்ளதா... பரிகாரம் கூறவும்... 

வாசகர், வேலூர். 

உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். லக்னாதிபதி சூரிய பகவான் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்றுள்ள பூர்வ புண்ணியாதிபதியுடன் இணைந்து சிவராஜ யோகத்தைப் பெறுகிறார். 
சுக பாக்கியாதிபதியான செவ்வாய் பகவான் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று, புத, சுக்கிர பகவான்களுடன் இணைந்திருக்கிறார். ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்றமர்ந்திருப்பது சிறப்பு. 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் மீதும், ஒன்பதாம் பார்வை லக்னத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சந்திர (குரு சந்திர யோகம்) பகவானின் மீதும் படிகிறது. 
சந்திர பகவானை குரு பகவான் பார்வை செய்வதாலும், சனிபகவான் மூலத் திரிகோண வீட்டில் கேந்திர பலத்துடன் பஞ்சமஹா புருஷ யோகங்களிலொன்றான சச மஹா யோகத்தைக் கொடுப்பதாலும் புனர்பூ தோஷத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வழிபட்டு வரவும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT