ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் கப்பலில் வேலை செய்து விட்டு தற்சமயம் சொந்தமாக தொழில் செய்கிறார். தொழில் சுமாராக செல்கிறது. எப்பொழுது முன்னேற்றமடையும்? 

11th Jun 2021 04:29 PM

ADVERTISEMENT

 

என் மகன் கப்பலில் வேலை செய்து விட்டு தற்சமயம் சொந்தமாக தொழில் செய்கிறார். தொழில் சுமாராக செல்கிறது. எப்பொழுது முன்னேற்றமடையும்? 

-வாசகி, சென்னை. 

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னாதிபதி, ஆறாமதிபதி சுக்கிர பகவான் ஆறாம் வீட்டிலேயே நீச்ச பங்க ராஜயோகம் பெற்றுள்ள சுகாதிபதியான சூரிய பகவானுடன் இணைந்திருக்கிறார். இரண்டாம் வீட்டிற்கும், ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான், தர்மகர்மாதிபதியான சனிபகவானுடன் களத்திர நட்பு ஸ்தானத்தில் (சனிபகவான் திக்பலம்) அமர்ந்திருக்கிறார். 
அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் பத்தாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக இரண்டாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ஆறாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜயோகம்) பகவானையும், சுக்கிர பகவானையும் பார்வை செய்கிறார். 
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் ஒன்பதாம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. தற்சமயம் சந்திர பகவானின் தசையில் தர்மகர்மாதிபதியின் புக்தி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் நடக்கும். இந்த காலகட்டத்தில் ஏழரை சனியும் முடியும் தறுவாயில் உள்ளதால் 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு வாழ்க்கையில் நிம்மதி நிறையும். செய்தொழிலில் முன்னேற்றமுண்டாகும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT