ஜோதிட கேள்வி பதில்கள்

என் மருமகள் மகனை விட்டுப் பிரிந்து விவாகரத்து வழக்கு போட்டுள்ளார். எப்பொழுது விவாகரத்து கிடைக்கும்? மறுமணம் எப்பொழுது நடக்கும்? 

3rd Dec 2021 06:00 AM

ADVERTISEMENT

என் மருமகள் மகனை விட்டுப் பிரிந்து விவாகரத்து வழக்கு போட்டுள்ளார். எப்பொழுது விவாகரத்து கிடைக்கும்? மறுமணம் எப்பொழுது நடக்கும்? 

-வாசகர், திருவாரூர் மாவட்டம். 

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னாதிபதி, ஆறாமதிபதி சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் புத பகவானுடன் இணைந்து மஹாவிஷ்ணு மஹாலட்சுமி யோகத்தை கொடுக்கிறார்கள். தர்மகர்மாதிபதி சனி பகவான் அஷ்டம ஸ்தானத்திலமர்ந்திருப்பதும் சிறப்பு.  அஷ்டம, லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லக்னத்திலமர்ந்து ஐந்தாம் வீட்டையும், ஏழாம் வீட்டையும்,  ஒன்பதாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் புத, சுக்கிர பகவான்களையும் பார்வை செய்கிறார். 
சந்திர பகவான் மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்றமர்ந்து பாக்கிய ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் புத, சுக்கிர பகவான்களையும் பார்வை செய்கிறார். தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் சனி பகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் விவாகரத்து கிடைத்துவிடும்.  அதற்குப்பிறகு ஓராண்டுக்குள் மறுமணம் கைகூடு

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT