ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் மருமகள் ஜாதகங்களை இணைத்துள்ளேன். திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்றன. இன்னும் மழலை பாக்கியம் உண்டாகவில்லை.

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

 

என் மகன் மருமகள் ஜாதகங்களை இணைத்துள்ளேன். திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்றன. இன்னும் மழலை பாக்கியம் உண்டாகவில்லை. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த மகன், கரோனா காலத்தில் வேலையை இழந்து தற்சமயம் எங்களுடன் வசித்து வருகிறார்கள். மீண்டும் வெளிநாட்டு வேலை கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 

-வாசகி, பெங்களூரு.

உங்கள் மகனுக்கு மீன லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதி சந்திர பகவான் லக்னத்தில் அமர்ந்திருப்பதால் புத்திர பாக்கியம் உண்டு. லக்னம், தொழில் ஸ்தானாதிபதி குரு பகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் பெற்றுள்ள சுக, களத்திர நட்பு ஸ்தானாதிபதியான புத பகவானுடனும், லாப, அயன ஸ்தானாதிபதியான சனி பகவான்களுடனும் இணைந்து இருக்கிறார்.

ADVERTISEMENT

லக்னாதிபதி லக்னம் என்கிற உயிர் ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் லக்னம் வலுவடைகிறது. அதோடு சனி பகவான் லக்னத்தைப் பார்வை செய்வதும் மஹா கீர்த்தி யோகமாகும்.

தைரியம் மற்றும் அஷ்டம ஆயுள் ஸ்தானாதிபதியான சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திலேயே மூலத் திரிகோணம் பெற்றமர்ந்திருப்பது சிறப்பு. குரு பகவான் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பாகும். 

குரு பகவானின் ஐந்தாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும், ஏழாம் பார்வை லக்னத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் புத்திர ஸ்தானாதிபதியான சந்திர (கஜகேசரியோகம்) பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும் படிகிறது.
தன, பாக்கியாதிபதி செவ்வாய் பகவான் புத்திர ஸ்தானத்தில் நீச்சம் பெற்றமர்ந்திருக்கிறார். நீச்சம் பெறும் கிரகம் எங்கு உச்சமடைவாரோ அந்த வீட்டுக்குரிய கிரகம் லக்ன கேந்திரத்திலோ, சந்திர கேந்திரத்திலோ அமர்ந்திருந்தால் நீச்சம் பெற்ற கிரகத்திற்கு நீச்ச பங்க ராஜயோகம் உண்டாகும். இங்கு மகர ராசிக்கு அதிபதியான சனி பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் (லக்ன கேந்திரம்) அமர்ந்திருப்பதால் செவ்வாய் பகவானுக்கு நீச்ச பங்க ராஜயோகம் உண்டாகிறது. 
ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் ஆறாம் வீட்டிலேயே சுய சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆத்ம நண்பரான குரு பகவானின் மூலத் திரிகோண ராசியை அடைகிறார். 
மீன லக்னத்திற்கு சூரிய பகவான் பகை பெற்றவராக (மறைவு ஸ்தானம்) கருதப்பட்டாலும், லக்னாதிபதிக்கு நண்பராக ஆவதால் சுபராகவே கருதப்படுகிறார். 
புத்திர காரகரான குரு பகவானுக்கு, பித்ரு காரகரான சூரிய பகவானின் சுப சம்பந்தம் எந்த வகையிலாவது ஏற்பட்டிருந்தால், வம்ச விருத்தி உண்டாகிவிடும்.
தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் புத பகவானின் புக்தி இறுதிப்பகுதி நடக்கிறது. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். 
உங்கள் மருமகளுக்கு ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னம், ஆறாமதிபதி சுக்கிர பகவான் லக்னத்தில் ஆட்சி பெற்று உச்சம் பெற்றுள்ள சந்திர பகவானுடன் இணைந்திருப்பது மேன்மையாகும். இதனால்  பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகமும் உண்டாகிறது.  
புத்திர ஸ்தானாதிபதி புத பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து, நவாம்சத்தில் தன் நட்பு வீடான கும்ப ராசியை அடைகிறார். 8, 11 -ஆம் வீடுகளுக்கு அதிபதியான புத்திர காரகரான குரு பகவான், அதிர்ஷ்டத்திற்கு கட்டியம் கூறும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெற்று நவாம்சத்தில் உச்சமடைந்து, புத்திர ஸ்தானாதிபதியான புத பகவானைப் பார்வை செய்வது சிறப்பு.  
தற்சமயம் குரு மஹா தசையில் பிற்பகுதி நடப்பதால் அவரின் ஜாதகப்படியும் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குழந்தை பிறக்கும்.  
உங்கள் மகனுக்கு ஜூன் 2023-க்குப் பிறகு தொடங்கும் சூரிய மஹா தசையில் சுய புக்திக்குப் பிறகு, மறுபடியும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT