ஜோதிட கேள்வி பதில்கள்

என் பேரனுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதா? திருமணம் எப்பொழுது நடக்கும்?

3rd Dec 2021 06:00 AM

ADVERTISEMENT

என் பேரனுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதா? திருமணம் எப்பொழுது நடக்கும்?

-வாசகி, மாதவரம்.

உங்கள் பேரனுக்கு கன்னி லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்.  லக்னாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி புத பகவான் பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) அமர்ந்திருப்பது சிறப்பு. அதோடு லக்னத்திற்கு லாப ஸ்தானத்திலும், தொழில் ஸ்தானத்திற்கு தன ஸ்தானமான இரண்டாம் வீட்டிலும் பாவாத் பாவ அடிப்படையில் அமர்ந்திருப்பது மேலும் சிறப்பாகும்.

ஐந்து, ஆறாம் வீடுகளுக்கு அதிபதியான சனி பகவான் ஆறாம் வீட்டிலமர்ந்து, மூன்றாம் பார்வையாக எட்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் தன, பாக்கியாதிபதியான சுக்கிர பகவானையும் பார்வை செய்கிறார். லாபாதிபதி சந்திர பகவான் பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய் (சந்திர மங்கள யோகம்) பகவானுடன் இணைந்திருப்பதால் வெளிநாட்டில் நிரந்தரமாக தங்கக் கூடிய வாய்ப்புகளும் ஏற்படும்.

ADVERTISEMENT

பன்னிரண்டாமதிபதி தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் திக்பலம் பெற்றமர்ந்திருப்பதும் சிறப்பாகும்.

தற்சமயம் செவ்வாய் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் திருமணமும் நடந்தேறும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT