என் இரண்டாம் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? உத்தியோகம் எவ்வாறு அமையும்? எதிர்காலம், மணவாழ்க்கை எவ்வாறு இருக்கும்?
-வாசகி, தஞ்சாவூர்.
உங்கள் இரண்டாம் மகனுக்கு துலாம் லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி, எட்டாமதிபதி சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதியுடன் இணைந்து மஹாவிஷ்ணு மஹாலட்சுமி யோகத்தைப் பெறுகிறார். அதோடு நவாம்சத்திலும் துலா ராசியில் மூலத்திரிகோணம் பெறுகிறார்.
சுக, பூர்வ புண்ணியாதிபதி சனி பகவான் அயன ஸ்தானத்தில் தன் விரோதம் பெற்ற கிரகமான (களத்திர ஸ்தானாதிபதி) செவ்வாய் பகவானுடன் இணைந்திருக்கிறார். இவர்களை ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கும் சந்திர பகவான் பார்வை செய்கிறார். மூன்று, ஆறாம் வீடுகளுக்கு அதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக மூன்றாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக ஐந்தாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.
தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சூரிய பகவான் திக்பலம் பெற்று ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார். இதனால் உத்தியோகத்தில் உயரிய நிலையை எட்டி விடுவார். லாப ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் பொருளாதாரம் மேன்மையாகவே அமையும். தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாகவே அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.