ஜோதிட கேள்வி பதில்கள்

வெளிநாட்டில் வேலை பார்த்து திரும்பி வந்த என் மகனுக்கு மீண்டும் வெளிநாட்டில் வேலை கிடைக்குமா... அல்லது இங்கேயே வேறு ஏதாவது வேலைக்குச் செல்வாரா? திருமணம் எப்பொழுது நடக்கும்? 

27th Aug 2021 03:45 PM

ADVERTISEMENT

வெளிநாட்டில் வேலை பார்த்து திரும்பி வந்த என் மகனுக்கு மீண்டும் வெளிநாட்டில் வேலை கிடைக்குமா... அல்லது இங்கேயே வேறு ஏதாவது வேலைக்குச் செல்வாரா? திருமணம் எப்பொழுது நடக்கும்? 

-வாசகி, நங்கநல்லூர். 

உங்கள் மகனுக்கு மகர லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். லக்னாதிபதி சனி பகவான் அயன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். ஐந்து, பத்தாமதிபதி யோக காரகரான சுக்கிர பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். 
ஆறு, ஒன்பதாமதிபதி புத பகவான் பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சி, உச்சம் மூலத்திரிகோணம் பெற்றமர்ந்திருக்கிறார். 
முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து, ஐந்தாம் பார்வையாக ஒன்பதாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் பலம் பெற்ற புத பகவானையும், ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக லக்னத்தையும் பார்வை செய்கிறார். 
தற்சமயம் நட்பு ஸ்தானாதிபதியான சந்திர பகவானின் தசையில், தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திலுள்ள ராகு பகவானின் புக்தி நடக்கிறது. இந்த காலகட்டத்தில் தகுதிக்கேற்ற வேலை உள்நாட்டிலேயே கிடைக்கும். திருமணமும் கைகூடும். 2024 -ஆம் ஆண்டு தொடங்கியவுடன் மறுபடியும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT