ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு மகர லக்னமா... கும்ப லக்னமா..? ஜாதகப்படி சொந்த வீடு கட்டும் அமைப்பு உண்டா? வாசல் எந்தத் திசையில் அமைந்திருந்தால் நல்லது..?

27th Aug 2021 03:40 PM

ADVERTISEMENT

எனக்கு மகர லக்னமா... கும்ப லக்னமா..? ஜாதகப்படி சொந்த வீடு கட்டும் அமைப்பு உண்டா? வாசல் எந்தத் திசையில் அமைந்திருந்தால் நல்லது..?

-வாசகர், வடலூர். 

உங்களுக்கு மகர லக்னம் (கும்ப லக்னமல்ல), மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி, குடும்பாதிபதி சனி பகவான் விரய ஸ்தானத்தில் அமர்ந்து, ஏழாம் பார்வையாக ஆறாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் சுக லாபாதிபதியான செவ்வாய் பகவானையும் பார்வை செய்கிறார். 

பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து, தன் மூலத்திரிகோண வீடான தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். 

ADVERTISEMENT

தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், விரய ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்திலமர்ந்து ஐந்தாம் பார்வையாக தைரிய ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜயோகம்) பகவானையும், சந்திர (குரு சந்திர யோகம்) பகவானையும், புத, கேது பகவான்களையும் பார்வை செய்கிறார். 

தற்சமயம் குரு பகவானின் பார்வையிலுள்ள களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சந்திர பகவானின் தசை நடப்பதால், 2023 -ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு சொந்த வீடு அமையும். கிழக்குப் பார்த்த வீடு உங்களுக்கு ஏற்றது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT