ஜோதிட கேள்வி பதில்கள்

துர்க்கையையும், முருகரையும் வழிபடவும்

DIN


என் எதிர்காலம் எவ்வாறு உள்ளது? கடன் இல்லாமல் இறுதி வரை வாழ முடியுமா? என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

-வாசகர், உடுமலை.

உங்களுக்கு விருச்சிக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னாதிபதியும், தொழில் ஸ்தானாதிபதியுமான சூரிய, செவ்வாய் பகவான்கள் பத்தாம் வீட்டில் திக் பலம் பெற்றிருக்கிறார்கள். 

தனாதிபதி, பூர்வ புண்ணியாதிபதியான குரு பகவான் லாபஸ்தானத்தில் லாபாதிபதி புத பகவான், ஏழு மற்றும் பன்னிரண்டாமதிபதியான நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சுக்கிர பகவானுடனும் இணைந்திருக்கிறார். தைரிய, சுக ஸ்தானாதிபதியான சனி பகவான் லக்னத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். 

தற்சமயம் ராகு பகவானின் தசையில் சுயபுத்தி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் நடக்கும். ராகு பகவான் அயன ஸ்தானத்தில், குரு பகவானின் சாரத்தில் அமர்ந்திருப்பதாலும், ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானத்தில் கேது பகவான் அமர்ந்திருப்பதாலும் இறுதிக்காலம் வரை கடன், உடல் உபாதை எதுவும் பெரிதாக ஏற்படாது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT