ஜோதிட கேள்வி பதில்கள்

வரி ஆலோசகராகவே இருக்கலாம்!

25th Sep 2020 05:03 PM

ADVERTISEMENT


எனக்கு நிரந்தரமான வேலை இல்லை. வரி ஆலோசகராக இருந்தேன். இதே துறையில் வேலை கிடைக்குமா? வேறு துறைக்கு மாறலாமா?

-சுகவனம், ஓசூர்.

உங்களுக்கு கன்னி லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம், லக்னாதிபதி தொழில் ஸ்தானாதிபதி புத பகவான் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று தைரிய ஸ்தானத்தில் சூரிய, கேது பகவான்களுடன் இணைந்திருக்கிறார். இவர்களை பாக்கிய ஸ்தானத்திலிருந்து சந்திர, ராகு பகவான்கள் பார்வை செய்வதும் சிறப்பு. சுகம், களத்திர நட்பு ஸ்தானங்களுக்கு அதிபதியான குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் சாரத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் தைரிய லாபாதிபதியான செவ்வாய் பகவானையும் (குரு மங்கள யோகம்), ஒன்பதாம் பார்வையாக ஆறாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் மூலத் திரிகோணம் பெற்றுள்ள சனி பகவானையும் பார்வை செய்கிறார். 

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தன பாக்கியாதிபதியான சுக்கிர பகவான் அமர்ந்திருப்பதால் பூர்வ புண்ணியம் வலுவாகிறது. தற்சமயம் சனி பகவானின் தசையில் ராகு பகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் நீங்கள் சார்ந்துள்ள துறையிலேயே வேலை கிடைக்கும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும். 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT