ஜோதிட கேள்வி பதில்கள்

முருகப் பெருமானை வழிபடவும்

25th Sep 2020 05:03 PM

ADVERTISEMENT


என் மகன் நன்றாகப் படித்து கல்லூரி ஆசிரியர் வேலையில் இருந்தார். தற்சமயம் வேலை போய்விட்டது. நிச்சயித்த திருமணமும் நின்றுவிட்டது. அவ்வப்பொழுது அவருக்கு தலைவலியும் வருகிறது. எப்பொழுது வாழ்க்கை சீராகும்? 

-வாசகர், ஸ்ரீமுஷ்ணம். 

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னம், எட்டாமதிபதி சுக்கிர பகவான் பதினொன்றாம் வீட்டில் பத்தாமதிபதி மற்றும் இரண்டு, ஏழாமதிபதியான செவ்வாய் பகவானுடனும் இணைந்திருக்கிறார். இதனால் சந்திர மங்கள யோகமுண்டாகிறது. பதினொன்றாம் அதிபதி சூரிய பகவான் ஒன்பதாம் வீட்டில் வர்கோத்தமத்தில் இருந்து கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். ஒன்பதாமதிபதி மற்றும் பன்னிரண்டாமதிபதியான புத பகவான் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்றுள்ள குரு பகவானுடன் இணைந்திருக்கிறார்.

இவர்களை துலாம் லக்னத்திற்கு "ராஜ யோக காரகர்' என்றழைக்கப் படும் சச மஹா யோகம் பெற்ற சனி பகவான் நான்காம் வீட்டிலிருந்து பார்வை செய்கிறார். அவருக்கு தற்சமயம் சந்திர மஹா தசை முடியும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான நல்ல வருமானமுள்ள வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குப் பிறகு மேற்படிப்புக்கு வாய்ப்பு உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT