ஜோதிட கேள்வி பதில்கள்

அரசு வேலை கிடைக்கும்! 

25th Sep 2020 05:08 PM

ADVERTISEMENT


பட்டப்படிப்பு முடித்துள்ள எனது மகளுக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்? அரசு வேலை கிடைக்குமா?

- வாசகர், தென் கீரனூர். 

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி, விசாகம் நட்சத்திரம். லக்னம், சுகாதிபதி குருபகவான் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் வீட்டில் உச்சம் பெற்று அங்கு நீச்சம் பெற்று அமர்ந்திருக்கும் பூர்வ புண்ணிய புத்திராதிபதியான செவ்வாய் பகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். பாக்கியாதிபதி சூரிய பகவான் "சர்வீஸ்' என்கிற சேவை செய்யும் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். 

ஆறாம் வீட்டிற்கும், பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார். குடும்பாதிபதி குடும்ப ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். தற்சமயம் சனி மஹா தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான அரசு வேலை கிடைத்துவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT