ஜோதிட கேள்வி பதில்கள்

வேலை கிடைக்கும்; வரனும் அமையும்!

DIN


என் மகளுக்கு தற்பொழுது ஏழரை சனி நடைபெறுகிறது. பி.இ. படித்துள்ளார். அவருக்கு அரசு வேலை கிடைக்குமா? அல்லது தனியார் வேலை அமையுமா? வேலை கிடைக்காத விரக்தியில்இருக்கிறார். திருமணப் பேச்சைஎடுத்தாலேகோபப்படுகிறார். அவரது திருமணம் எப்பொழுது நடைபெறும்? பரிகாரம் ஏதும் செய்யவேண்டுமா?

-வாசகர், கொரட்டூர்.

உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம். ஆறாமதிபதி செவ்வாய் பகவான் பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றமர்ந்து ஐந்தாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் சுக்கிர பகவானையும், ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் லக்னாதிபதியான செவ்வாய் பகவானையும் (குரு மங்கள யோகம்) பார்வை செய்கிறார்.
பாக்கியாதிபதியான சந்திர பகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெற்றிருந்தாலும் கேது பகவானுடன் இணைந்து இருப்பது சிறு குறை. தைரிய, சுக ஸ்தானங்களுக்கு அதிபதியான சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து குரு பகவானுடன் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார். அதோடு நவாம்சத்திலும் மூலத் திரிகோணம் பெற்றிருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதி சூரிய பகவான், லாபாதிபதி புத பகவான் இருவரும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் பலமாக இணைந்து புத ஆதித்ய யோகத்தைக் கொடுக்கிறார்கள். அவருக்கு அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளிலோ, வங்கி, காப்பீட்டுத் துறைகளிலோ உத்தியோகம் அமையும்.
இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் தென்கிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பிரதி திங்கள்கிழமைகளில் பார்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வரவும். முடிந்தால் ஒரு முறை காளஹஸ்தி சென்று நாகசாந்தி செய்துவிட்டு வரவும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT