ஜோதிட கேள்வி பதில்கள்

வெளிநாடு செல்லும் வாய்ப்பு!

30th Oct 2020 12:00 AM

ADVERTISEMENT


என் மகன் பொறியியல் படிப்பு நான்காமாண்டு படிக்கிறார். அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க விரும்புகிறார். உள்நாட்டிலேயே வேலை கிடைக்குமா? எது அவருக்கு ஏற்றது? அவரின் ஜாதகத்தில் அதிர்ஷ்டம் உள்ளதா? 

-வாசகர், விளாத்திகுளம். 

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். லக்னம், தொழில் ஸ்தானாதிபதி புத பகவான் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்றிருக்கும் சூரிய பகவானுடன் (புத ஆதித்ய யோகம்) இணைந்திருக்கிறார். 
பூர்வ புண்ணியாதிபதி சனி பகவான் எட்டாம் வீட்டில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று, நான்கு, ஏழாம் வீடுகளுக்கதிபதியாகிய குரு பகவானுடன் இணைந்திருக்கிறார். 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தன பாக்கியாதிபதி சுக்கிர பகவான் ஐந்தாம் வீட்டில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். லாப ஸ்தானத்தில் ராகு பகவான் இருப்பதும், லாபாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதும், பாக்கியாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பாகும். 
தற்சமயம் ராகு பகவானின் தசையில் சுக்கிர புக்தி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடக்கும். 2022 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT