ஜோதிட கேள்வி பதில்கள்

மழலை பாக்கியம் உண்டு!

30th Oct 2020 12:00 AM

ADVERTISEMENT


எங்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகின்றன. எப்பொழுது குழந்தை பிறக்கும்? மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? எங்கள் குலதெய்வம் எதுவென்று கூறவும்!

-வாசகி, திருநெல்வேலி. 

உங்களுக்கு மேஷ லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். லக்னாதிபதி, அஷ்டமாதிபதி செவ்வாய் பகவான் பாக்கியாதிபதியான குரு பகவானுடன் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். இதனால் குரு மங்கள யோகம் உண்டாகிறது. 
பூர்வ புண்ணியாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சிபெற்று சுகாதிபதி, ஆறாமதிபதி புத பகவான், தொழில் லாபாதிபதி சனி பகவான் ஆகியோருடன் இணைந்திருப்பது சிறப்பு. இதனால் மழலை பாக்கியம் உண்டாகும் என்று கூறவேண்டும். தற்சமயம் லக்னாதிபதியின் தசையில் முற்பகுதி நடப்பதும் சிறப்பாகும். உங்கள் கணவருக்கு கடக லக்னம், மகர ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னாதிபதி, ராகு பகவானுடன் இணைந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார். 
பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானாதிபதி, தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சனி, சுக்கிர பகவான்களுடன் இணைந்திருக்கிறார். 
உங்கள் கணவருக்கு தற்சமயம் சனி பகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. அதனால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் சிகிச்சையின் பேரில் மழலை பாக்கியம் உண்டாகும். உங்கள் இருவரின் ஜாதகப்படி உங்கள் குலதெய்வம் முருகப் பெருமானாவார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT