ஜோதிட கேள்வி பதில்கள்

செவ்வாய் தோஷம் இல்லை!

30th Oct 2020 06:00 AM

ADVERTISEMENT

 

என் மகள் அமெரிக்காவில் வேலை செய்கிறார். திருமணத்திற்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றியடை வதில்லை. பல வரன்கள் வருகின்றனர். ஆனாலும் அமையவில்லை. செவ்வாய் தோஷம் உள்ளதா? எப்பொழுது திருமணம் நடக்கும்? பரிகாரம் செய்ய வேண்டுமா? 

-வாசகர், சென்னை. 

உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். லக்னம், ஆறாமதிபதியான செவ்வாய் பகவான் எட்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்றும் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். 
விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் பகவான் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் பகவானோடு கேது பகவானும் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். "குஜவத் கேது' என்பது ஜோதிட விதி. எட்டாம் வீட்டை புதையல் ஸ்தானம் என்கிறோம். இதனால் வாழ்க்கையில் அனைத்து செளபாக்கியங்களும் செவ்வாய், கேது பகவான்களால் கிடைக்கும் என்று கூற வேண்டும். 
இவர்களுடன் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவானும் இணைந்திருக்கிறார். தன, பூர்வபுண்ணியாதிபதி குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். தர்ம கர்மாதிபதிகள் அஷ்டம லாபாதிபதியான புத பகவானுடன் ஆறாம் வீட்டில் இணைந்திருக்கிறார்கள். 
தொழில் ஸ்தானாதிபதியான சூரிய பகவான் உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பு. தற்சமயம் சூரிய பகவானின் தசை முடியும் தருவாயில் உள்ளதால், அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் தகுதியான வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும். 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT