ஜோதிட கேள்வி பதில்கள்

மகிழ்ச்சி நிறையும்!

DIN


எனக்கு குடும்பத்தில் நிறைய பிரச்னைகள். எல்லா விஷயங்களிலும் தடைகளும் உண்டாகி மிகவும் வருத்தத்தில் உள்ளேன். கடன் எப்பொழுது தீரும்? நிலைமை எப்பொழுது சீரடையும்? 

வாசகர், ஆவடி.

உங்களுக்கு மிதுன லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதம். லக்னம், சுகாதிபதி புத பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மிதுன ராசியை அடைகிறார். 
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) அமர்ந்து, இரண்டு திரிகோணாதிபதிகளின் இணைவை உண்டாக்குகிறார். 
இவர்களுடன் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் களத்திர நட்பு ஸ்தானத்திலேயே மூலத் திரிகோணம் பெற்று பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்ச யோகத்தைப் பெற்றமர்ந்து, ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக லக்னத்தையும், ஒன்பதாம் பார்வையாக தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டையும் பார்வை 
செய்கிறார். 
அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் (பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம்), பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றமர்ந்திருக்கிறார். 
ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திலேயே உச்சம் பெற்றிருக்கிறார். தைரிய ஸ்தானாதி விபரீத ராஜ யோகம் பெற்று, ஆறாம் வீட்டில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். 
தனாதிபதியான சந்திர பகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. 
தற்சமயம் சுக்கிர மஹா தசையில் தனாதிபதியான சந்திர பகவானின் புக்தி சென்ற மாதத்திலிருந்து நடக்கத் தொடங்கியுள்ளது. அதனால் படிப்படியாக உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள், குறிப்பாக பணப்பிரச்னை, கடன் பிரச்னை குறைந்து மகிழ்ச்சி நிறையத் தொடங்கும். சுக்கிர மஹா தசை யோக தசையாகவே செல்லும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT