ஜோதிட கேள்வி பதில்கள்

இரண்டு ஆண்டுகளில் மழலை பாக்கியம்

தினமணி

என் சகோதரி மற்றும் அவரது கணவர் ஜாதகங்களை அனுப்பியிருக்கிறேன். அவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் குழந்தை பிறக்கவில்லை. எப்பொழுது குழந்தை பிறக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 

வாசகர், இந்தூர்.

உங்கள் சகோதரிக்கு கன்னி லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம். லக்னம், தொழில் ஸ்தானாதிபதியான புத பகவான் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி, உச்சம் மூலத் திரிகோண ராசியான கன்னி ராசியை அடைகிறார். 

பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். 
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். 
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம், வர்கோத்தமம் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) பெற்றமர்ந்திருக்கிறார். 
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் சுப கிரகமாகி லக்னத்தில் கேந்திராதிபத்ய தோஷம் பெற்று, நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சனி, சுக்கிர பகவான்களையும், ஏழாம் பார்வையாக ஏழாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானையும் பார்வை செய்கிறார். 
லாப ஸ்தானாதிபதி சந்திர பகவான் லாப ஸ்தானத்திலேயே ஆட்சிபெற்று நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டுக்கதிபதியான சூரிய பகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். ராகு பகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். கேது பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். உங்கள் சகோதரியின் கணவருக்கு விருச்சிக லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம் இரண்டாம் பாதம். லக்னம், ஆறாமதிபதியான செவ்வாய் பகவான் அயன ஸ்தானத்தில் சுய சாரத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். 
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் இரண்டாம் வீட்டில் மூலத் திரிகோணம் பெற்று நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். 
பாக்கியாதிபதியான சந்திர பகவான் லக்னத்தில் அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். தைரிய, சுகாதிபதியான சனி பகவான் பன்னிரண்டாம் வீட்டில் உச்சம் பெற்று நவாம்சத்தில் நீச்சமடைகிறார். 
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் லக்னத்திலமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 
அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் குடும்ப ஸ்தானத்திலமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். தொழில் ஸ்தானாதிபதியான சூரிய பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 
தொழில் ஸ்தானாதிபதியும், லாபாதிபதியும் ஒரே பாகையில் இணைந்து இருப்பது சிறப்பு. கேது பகவான் லக்னத்திலமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். ராகு பகவான் ரிஷப ராசியில் அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். 
குரு பகவான் ஆறாம் வீடு, எட்டாம் வீடு, பத்தாம் வீடுகளைப் பார்வை செய்கிறார். 
உங்கள் சகோதரியின் புத்திர ஸ்தானம் அவரின் கணவரின் புத்திர ஸ்தானத்தை விட சற்று கூடுதல் பலம் பெற்றிருப்பது சிறப்பாகும். உங்கள் சகோதரிக்கு தற்சமயம் புத பகவானின் தசையில் ராகு பகவானின் புக்தி இன்னும் ஒன்றரை ஆண்டுகள் நடக்கும். அவரின் கணவருக்கு சுக்கிர பகவானின் தசையில் சுய புக்தி இன்னும் இரண்டரை ஆண்டுகள் நடக்கும். அதனால் அவர்களுக்கு இன்னும் இரண்டாண்டுகளுக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT