ஜோதிட கேள்வி பதில்கள்

அரசு வேலை கிடைக்கும்!

DIN


என் மகள் மேலாண்மைத் துறை பட்டப்படிப்பு இரண்டாமாண்டு படிக்கிறார். அவருக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? தந்தை இல்லாத அவருக்கு தந்தையின் குடும்பச் சொத்து கிடைக்க வேண்டும். மேற்படிப்பு படிக்க வைக்கலாமா? அரசு வேலை கிடைக்குமா? 

வாசகி, ... 

உங்கள் மகளுக்கு மகர லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். லக்னம், தனம், வாக்கு, குடும்பாதிபதி சனி பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சூரிய, புத, ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார். 

பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார். செவ்வாய் பகவான் ஆறாம் வீட்டில் சுக்கிர, குரு பகவான்களுடன் இணைந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். 

புத ஆதித்ய யோகம், குரு மங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. 

களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கதிபதியான சந்திர பகவான் சுக ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். எட்டு கிரகங்கள் தொடர்ந்து மூன்று ராசிகளில் அமர்ந்திருப்பது சிறப்பாகும். 

தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் குரு பகவானின் புக்தி நடக்கிறது. அவரை மேலாண்மைத் துறையில் மேற்படிப்பு படிக்க வைக்கவும். இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு படித்த, அரசு வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் மகளுக்கும் வங்கி, காப்பீட்டுத் துறை, மத்திய அரசு வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தும் இந்த காலகட்டத்திற்குள் கிடைத்துவிடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரச் சொல்லவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

SCROLL FOR NEXT