ஜோதிட கேள்வி பதில்கள்

சமதோஷமுள்ள வரன் அமையும்

DIN

என் மகள் பொறியியல் படிப்பு படித்து நல்ல வேலையில் உள்ளார். அவருக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? மணவாழ்க்கை எதிர்காலம் எவ்வாறு அமையும்? 

மணிகண்டன், துறையூர். 

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கடக ராசி, புனர்பூச நட்சத்திரம் நான்காம் பாதம். சுகாதிபதி புதன் பகவான் அயன சயன ஸ்தானத்தில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்றமர்ந்திருக்கிறார். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று பஞ்ச மஹா புருஷ யோகங்களிலொன்றான மாளவிகா யோகத்தைப் பெறுகிறார். 

அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் (பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம்), பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திலேயே மூலத் திரிகோணம் பெற்றமர்ந்திருக்கிறார். தனாதிபதி தனஸ்தானத்தில் வர்கோத்தமம் பெற்று ஆறு, பதினொன்றாம் வீட்டிற்கதிபதியான செவ்வாய் பகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தை அளிக்கிறார். 

தைரிய ஸ்தானாதிபதியான சூரிய பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் உச்சம் பெற்று கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். 

களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் ஆறாம் வீட்டில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று அமர்ந்து, ஐந்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் உச்சம் பெற்ற சுக்கிர பகவானையும், ஏழாம் பார்வையாக பன்னிரண்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் புத பகவானையும், ஒன்பதாம் பார்வையாக இரண்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் பகவானையும் (குரு மங்கள யோகம்) சந்திர பகவானையும் (குருச் சந்திர யோகம்) பார்வை செய்கிறார். 

தற்சமயம் புத பகவானின் தசையில் சுக்கிர பகவானின் புக்தி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். மணவாழ்க்கை, எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறான தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு எதிராக இந்தியா ஒத்துழைப்பு: அஜீத் தோவல்

முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப்பயிற்சி: ஏப்.29 இல் முன்பதிவு தொடக்கம்

395 தரமற்ற விதை மாதிரிகள் கண்டுபிடிப்பு

பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி: ஜொ்மனி அறிவிப்பு

ஆரம்ப சுகாதார மையத்தை சேதப்படுத்தியவா் கைது

SCROLL FOR NEXT